Home ஜல்சா ஒரு முத்தத்தின் விலை ரூபாய் 30 ஆயிரம்

ஒரு முத்தத்தின் விலை ரூபாய் 30 ஆயிரம்

30

இந்தியாவின் வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.

நகர்ப்புறங்களில் நடந்தால் பொலிசார் விசாரணை என்று நாட்களை இழுத்தடித்துக்கொண்டு செல்வார்கள், இதுவே கிராமப்புறங்களில் நடந்தால் அவர்கள் கொடுக்கும் தீர்வு சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், மரத்தில் கட்டிவைத்து அடிப்பார்கள், இன்னும் அதிகபட்சமாக வலுக்கட்டாயமாக நிகழ்ந்த சம்பவம் என்பதால் அபராதம் தான் விதிப்பார்கள்.

இதுவே குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை என்பதால், அதனை தூசி தட்டுவது போன்று தட்டிவிட்டு, அடுத்த குற்றசெயல்களில் ஈடுபடுவதற்கு தயாராகிவிடுகிறார்கள்.

பீகாரின் பெகுசராய் மாவட்டத்திலுள்ள இப்ராகிம்பூர் கிராமத்தில் அழகிய இளம் பெண் ஒருவர் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இளைஞர் அவரது கன்னத்தில் ஆசையாக முத்தம் கொடுத்துவிட்டு ஓடியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தன் பெற்றோரிடம் சொல்ல, உடனே ஊர்கூடியது. பஞ்சாயத்தில் முகமதுவுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு அபராதம் விதித்தால் என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள், ஒரு முத்தத்தின் விலை 20 ஆயிரம் ரூபாய் என விலை பேசும் நீங்கள், எனது மானத்தை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்த்தீர்களா?

இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், பொலிசில் புகார் கொடுத்து அந்த வாலிபனை தண்டிக்காமல் விடமாட்டேன் என சபதம் எடுத்துள்ளார்.