Home அந்தரங்கம் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேச வேண்டும் என்று கூறுவது ஏன் தெரியுமா? மீறினால் மவனே...

ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேச வேண்டும் என்று கூறுவது ஏன் தெரியுமா? மீறினால் மவனே காலி!

368

பெண்களிடம் பேசும் போது, அவங்க கண்ணை மட்டும் பார்த்து பேச வேண்டுமென நிறைய முறை நண்பர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறேன். சாதாரணமா கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசும்போது, அவங்க நம்ம பேச்சை மட்டும் கவனிக்கிறாங்கன்னு தோணும். அதனால் இயல்பாக பேச வரும். இல்லையென்றால் உரையாடல் மேற்கொள்வது சௌகர்யமாக இருக்காது. ஒருவர் நம்மை மதிப்போடு பார்க்கணும் என்று விரும்பினால் நேர் கொண்ட பார்வையோடு பேசணும்.

என்னிடம் யாரும் நேருக்குநேர் பார்த்து பேசவில்லை என்றால், அடுத்தமுறை அவர்களிடம் பேசுவதை தவிர்த்துவிடுவேன். ஒரு ஆணுக்கு இந்த அளவுக்கு உணர்வு இருக்கும் போது, ஆணை விட உள்ளுணர்வு அதிகம் கொண்ட பெண்ணுக்கு இது கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கும். எந்த ஒரு பெண்ணுமே தனக்கு பரிட்சயம் இல்லாத ஆண், தன்னுடைய மேனியில் கண்களை தவிர வேறு எங்கும் நோட்டமிடக்கூடாது என்பதை விரும்புவாள். தவறான நோக்கம் கொண்ட ஆண்களின் பார்வை எப்போதும் கழுத்துக்கு கீழேயே இருக்கும்.

பேசிக்கொண்டிருக்கும் போதே ஆடையை சரி செய்ய கைகள் கீழே போனால், குருகுருவென்று அவர்கள் கைகளையே பார்க்க கூடாது. பல பெண்களுக்கு அது சங்கடமான உணர்வை கொடுக்கும். உங்களால் கண்களை பார்த்து பேச முடியவில்லை என்றால், புருவத்தை டார்கெட் பண்ணுங்க. புருவத்தை பார்த்து பேசினால் கண்களைப்பார்த்து பேசுவது போலவே இருக்கும். கண்களைப் பார்த்துப் பேசாத ஆண்கள் எந்த உள்நோக்கம் கொண்டு பேசினாலும், பெண்களின் உள்ளுணர்வு காட்டிக்கொடுத்துவிடும்.

அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஒருவேளை தவறான நோக்கத்தில் கழுத்துக்கு கீழே பார்த்தாலும், பிரச்சனை எல்லாம் பண்ண மாட்டாங்க. உங்களைப்பற்றிய எண்ணம் திடமாக மனதில் பதிந்துவிடும். பிறகு பேசுவதை மெல்ல மெல்ல குறைக்க ஆரம்பித்து, இறுதியில் நட்பை முறித்துக்கொள்ள வேண்டி வரலாம். எதற்கு இந்த வம்பெல்லாம், ஒரு பெண்ணின் நல்ல நட்பு தொடர வேண்டும் என்றால், முதலில் பார்வையில் உள்ள வக்கிரம் போக வேண்டும்.