Home பெண்கள் ஒரு ஆண் இப்படி இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமாம்!

ஒரு ஆண் இப்படி இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமாம்!

148

பெண்களின் மனதை கொ ள்ளை கொள்ள வேண்டும் என்றால் ஒரு சில யுக்திகளை பின்பற்றி தான் ஆக வேண்டும். என்னது யுக்தியா! என ஷாக் ஆக வேண்டாம். அவர்களுக்கு பிடித்தாற் போல் ந்டந்துகொள்வதை தான் யுக்தி என்றேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என ஒரு சில ஆண்கள் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். ‘அப்படி என்னதான் உள்ளது அவனிடம்’ என நமக்கு அந்த நபர் மீது பொறாமையே வந்துவிடும். அப்படி உள்ள நபர்களை உற்றுநோக்கினால், எந்த பிரச்சனை வந்தாலும் அதனை கூலாக டீல் செய்வார்கள். பிரச்சனைகளை கையாள்வதில் பக்குவப்பட்ட ஆண் என்பதை அங்கேயே முடிவு செய்வார்கள் பெண்கள். கண்டிப்பாக நம்மை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை பிறக்க இந்த விஷயங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ரசனை மிக்க ஆண் என்றால் எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது. சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து பாராட்டினால், அடுத்து நமக்கு எப்போது காம்ப்ளிமென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கும் அளவிற்கு நீங்க பெண் மனதில் இடம் பிடித்து இருப்பீர்கள். அதற்கென சும்மா சும்மா காம்ப்ளிமென்ட் கொடுத்து, ஜொள்ளு என பெயர் எடுத்து விடாதீர்கள். அதே போல் எல்லா பெண்களிடம் நீங்க பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது காம்ப்ளிமென்ட் கொடுத்து கொண்டிருந்தாலும் உங்களை ப்ளே பாய் என முடிவு செய்து விடுவார்கள். ‘இவன் ஒருவேளை ப்ளே பாயாக இருப்பானோ?’ என்ற எண்ணம் வந்து விட்டாலே உங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

நகைசுவை உணர்வு மிக்க ஆணாக இருந்தால் கூடுதல் சிறப்பு. இந்த விஷயத்தில் கமிட் ஆன பின் நீங்க செய்யும் காமெடிக்கு அந்த குறிப்பிட்ட பெண் மட்டும் சிரிக்கும்படி இருக்க வேண்டும், எல்லோரும் சிரித்தால் உங்க மீது பொசிஷிவ்நெஸ் வந்துவிடும் பார்த்துக்கோங்க! அடுத்து, தவறு செய்து அதனை மறுக்கும் ஆண்களை காட்டிலும் அதனை நேர்மையாக ஒப்புக்கொள்ளும் ஆண்கள் என்றால் அங்கேயே நீங்க பெண்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்வீர்கள்.

அடுத்து முக்கியமான ஒன்று, தன்னை பற்றி பெருமை பேசும் ஆண்களை பெண்கள் விரும்பமாட்டார்கள். மற்றவர்கள் உங்களை பற்றி கூறினால், கூறும் நபரிடம் உங்களை பற்றி மேலும் அதிகம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதை விடுத்து என்னைப்பற்றி அந்த பெண்ணிற்கு தெரியவேண்டாமா என என்ணி உங்களை பற்றி ஒப்பித்து கொண்டிருக்காதீர்கள். அது அவர்களை எரிச்சல் அடைய செய்யலாம்.

அடுத்து அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்ற பெயரில், காதல் சொன்னபின் நெருக்கமாக இருக்கும் போது மரியாதை கொடுப்பதை சில பெண்கள் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் நீங்க உங்களது துணைக்கு ஏற்றாற் போல் செயல்படுவது நல்லது.

எல்லா பெண்களும் அறிவான, அழகான, கட்டுக்கோப்பான உடல் இருப்பவர்களை விரும்புவதில்லை. இவையாவும் முதலில் பெண்களை வசீகரிக்க உதவும். பழகிய பின்னர் உங்களது தோற்றம் அவர்களது மனதில் நிற்காது. நீங்க பெண்ணிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், மரியாதை, எப்படி கவனித்து கொள்கிறீர்கள் என்பது தான் அவர்களது மனதில் நிற்கும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளுங்க!