Home சமையல் குறிப்புகள் எலுமிச்சை கொண்டு தயாரித்த சிக்கன் டிரம்ஸ்டிக்

எலுமிச்சை கொண்டு தயாரித்த சிக்கன் டிரம்ஸ்டிக்

25

இந்த சிக்கன் டிரம்ஸ்டிக் குறைந்த விலையில் செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு டிஷ். உங்கள் கோடை சுற்றுலாவிற்கு, இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த கலவை கொண்டு பூசிய சிக்கன் டிரம்ஸ்டிக், ஏற்ற ஒன்று.
தேவையான பொருட்கள்:
சிக்கன் டிரம்ஸ்டிக் – 8, தோல் நீக்காமல்
புதிதாக எடுத்த எலுமிச்சை சாறு – 1/3 கப்
பெரிய சைஸ் கடுகு – 1/8 கப்
ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
தேன் – 1 டீஸ்பூன்
கலப்பு மூலிகைகள் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை தோல் – 1 தேக்கரண்டி, துருவியது
பூண்டு – 1 டீஸ்பூன், நன்கு துண்டு துண்தாக நறுக்கியது
உப்பு – த தேக்கரண்டி
கருப்பு மிளகு – ண தேக்கரண்டி, புதிதாக அரைத்தது

செய்முறை:
ஒரு அலுமினிய தாளை பேக்கிங் பாத்திரத்தில் வரிசையாக வைத்துக் கொள்ளவும்
ஒரு நடுத்தர அளவிலான கிண்ணத்தில், சிக்கன் டிரம்ஸ்டிக் தவிர அனைத்து பொருட்களையும் கலந்து கொள்ளவும்.
பேக்கிங் பாத்திரத்தில் சிக்கன் டிரம்ஸ்டிக்கை வைக்கவும், இதன் மீது மேலே கலந்த கலவையை பூசவும், சிக்கன் டிரம்ஸ்டிக்கை திருப்பி போட்டு முழுவதுமாக பூசவும்
ஒரு பிளாஸ்டிக் உறை கொண்டு இதை மூடி குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 90 நிமிடங்கள் வரை வைக்கவும், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிக்கன் டிரம்ஸ்டிக்கை திருப்பி வைக்கவும், அப்போதுதான் கலந்த சாறு சிக்கனில் நன்கு ஊறும்.
ஓவனை / நுண்ணலை அடுப்பை 200 டிகிரி செல்சியஸ் ல் சூடுபடுத்திக் கொள்ளவும்.
ஊற வைத்ததை நன்கு வடித்துக் கொண்டு, ஒரு ஆழமான பேக்கிங் பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும், இதை சுமார் 60 நிமிடங்கள் அல்லது சிக்கன் நன்கு வேகும் வரை ஓவனில் வைக்கவும்.