Home பெண்கள் எப்போதெல்லாம் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும்? நள்ளிரவாக இருந்தாலும் குளித்துவிடுவது நல்லது!

எப்போதெல்லாம் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும்? நள்ளிரவாக இருந்தாலும் குளித்துவிடுவது நல்லது!

217

மாதவிடாயின் போது சிலருக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, கைகால் வலி, உடல் சோர்வு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதில் மார்பக வலியானது பெண் பூப்படைவதற்கு முன்னர் அறிகுறியாக ஏற்படலாம். அதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் அறிகுறியாக வலி ஏற்படலாம். சிலருக்கு மாதவிடாயின் போதே வலி ஏற்படலாம். இதனை தவிர்த்து உடல் உறவின் போது அல்லது குழந்தை பேறுவின் போது மார்பக வலி ஏற்படலாம். இவை எல்லாம் ஹார்மோன் மாற்றங்களால் மட்டுமே ஏற்படக்கூடியவை. வெளியே சொல்ல முடியாத சங்கடங்களை புரிந்து கொண்டு, சுற்றம் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் ஏற்படும் வலிகளை மருத்துவ சொற்களில் Dysmenorrhea என்கிறோம்.

இந்த நேரததில் சிலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்க கூடியவை. அதுமட்டுமின்றி, இந்த நிவாரணிகள் எதிர்காலத்தில் பக்கவிளைவை ஏற்படுத்தலாம். முடிந்தவரை இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்வதே நல்லது.

இரும்புச்சத்து உள்ள ஆகாரமாக எடுத்து கொண்டு, வலி உள்ள மார்பகத்தில் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்க வலி மெல்ல மெல்ல குறையும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கைகால், முதுகு, இடுப்புவலி போன்ற எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். இந்த நேரத்தில் கொழுப்பு, எண்ணெய் பதார்த்தத்தை தவிர்க்கவும். ப்ரா அணியும் போது, இறுக்கமாக இல்லாமல் தளர்வாக அணியுங்கள். அடிவயிற்றில் வலி ஏற்படும் போது, ஹீட்டிங் பெட் அல்லது மண்ணை சூடு செய்து அதனை துணியில் கட்டி இதமான சூட்டில் வயிற்றில் ஒத்தி எடுக்க வலி குறைய துவங்கும். இதனை தவிர்த்து இஞ்சி டீ, வெந்தய நீர், பப்பாளி இவற்றை உண்டு வர தசைகள் இறுக்கப்பட்டு ஏற்படும் உடல் வலிகள் குறையும். இவை இல்லாமல் பட்டை டீ ஆனது 100% வலியை காணாமல் செய்து விடுகிறது. சுவையும் விரும்பதக்கதாகவே உள்ளது.

உடலின் சூடு அதிகரிப்பதாலே வலி ஏற்படும். மாதவிடாய் ஆகும் நேரம் எந்த நேரமாக இருந்தாலும், அப்போதே ஒரு துளி எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பது நல்லது. கிராமங்களில் இரவு 2 மணிக்கு மாதவிடாய் ஏற்பட்டாலும் அப்போதே குளிக்க வேண்டும் என்ற வழக்கம் இப்போதும் உண்டு. நேர காலம் பார்க்காமல் மாதவிலக்கு ஏற்பட்ட உடனே தலைக்கு குளிக்கும் போது, ஓரளவு உடல் உஷ்ணம் குறையும். இதனால் நாளுக்கு நாள் வலியும் குறையும்.