Home இரகசியகேள்வி-பதில் என் மனைவியை வச்சு இருக்கீங்களா’ன்னு கேட்டு

என் மனைவியை வச்சு இருக்கீங்களா’ன்னு கேட்டு

33

குடும்பத்தின் மூத்த பெண் நான்; பி.எஸ்சி., பி.எட்., முடித்து, ஒரு பல்கலையில், தற்காலிக பணியில் உள் ளேன். ஒரு தங்கை,

பி.எஸ்சி. முடித்துள்ளார். ஒருதம்பி, டி.எம்.இ.,முடித்து, நான் பணிபுரியும் பல்கலை கழகத்திலேயே, லிப்ட் ஆப்ரேட்டர் ஆக, தற்காலிகமாக பணியாற்றி வருகிறா ன். அம்மா இல்லத்தரசி; அப்பா, பல ஆண்டுகளாக சிங் கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பணியாற்றி வந்தார்.

எனக்கு ஆறு வயது இருக்கும் போதி லிருந்தே அப்பா ஊரிலிருந்து வந்தா ல், என் அம்மாவை அடிப்பார். நான் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, என் மாமா வீட்டிற்கு போனில் தகவல் கூறுவேன்; அவர்கள் வந்ததும் ஓடி விடுவார். பின், திரும்பி வந்து, ‘இனி மேல் அடிக்க மாட்டேன்ஸ’ எனக்கூறி, மறுபடியும் சண் டை போடுவார். எங்க அம்மா, யாரையும் பார்க்கக் கூ டாது; சாலையில் யாராவது அம்மாவைப் பார்த்து விட் டால், ‘அவன் ஏன் உன்னைப் பாக்கிறான்ஸ’ எனக் கேட்டு அடிப்பார்.

பின், சிங்கப்பூரில் ஏஜன்ட் வேலை பார்த்து கடன்பட்டு, அடிபட்டு வந்தார். அதன்பின், மலேசியா சென்றார். அ ங்கிருந்து அவர் வீட்டிற்கு போனில் பேசும் போது, ஆடு கத்தினால் கூட, ‘எங்க இருக்கேஸ எவன் கூட வண்டி யில போறே’ன்னு அசிங்கமாக திட்டுவார்; ஆனால், அவர் அங்கே வேறொரு பெண்ணுடன்வாழ்ந்து வந்தா ர். அவர்செய்வதை எல்லாம், எங்க அம்மா செய்வதாக கூறி சண்டை போடுவார்.

தற்போது எங்களுடன் இருக்கும் அப்பா, தினமும், அக்கம் பக்கத்து வீட்டு ஆண்களை, ‘என் மனைவி யை வச்சு இருக்கீங்களா’ன்னு கே ட்டு, கல்லை அவர்கள் மேல் எறி கிறார்; கதவு ஜன்னல்களை உடை க்கிறார்; வீட்டில் நிம்மதியாக இரு க்க முடியவில்லை. எல்லாரும், இவரை பைத்தியம் என்றுகூறியதால், மருத்துவமனை யில் வைத்து பார்த்தோம். ஆனால், அவர், சிகிச்சைக் கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால், மனநலம் சீராகவில்லை.

இதனால், இரவு – பகல் பாராமல், கொலை செய்வது போல், என் அம்மாவை துன்புறுத்தி வருகிறார். டாய் லட் போனால், ‘எத்தனை தடவை போறஸ’ என்றும், ‘உன் முகம் நல்லாயில்லஸ’ என்று கூறி அடிக்கிறார்.

ஒருமுறை, என்அம்மாவை அடிக்கும்போது, என் தம்பி பிடித்து தள்ளியதில், கட்டிலி ல் விழுந்து மண்டையில் காயம் ஏற்பட்டது. உடனே, என் அம்மாவும், தம்பியும் அடித்ததாக போலீசில் புகார் செய்தார். 24 மணிநேரத்தில், 20மணிநேரம் மனநலம் பாதி க்கப்பட்டவர்போல் பேசி அடி த்து, உடைத்து நொறுக்குகி றார்.

நாலு மணி நேரம், ‘இனிமேல் இப்படியெல்லாம் பேச மாட்டேன்; என்னை மன்னிச்சுடுங்க. என்னை அனா தையாக விட்டுடாதீங்கஸ’ என அழுகிறார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ‘ஒரே இரைச்சல்ஸ இந் த பைத்தியத்த எங்கேயாவது கொண்டு செல்லுங்க; இல்லன்னா நீங்க எங்கேயாவது போங்கஸ’ எனக் கூறு கின்றனர். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவி ல்லை. நான் பார்த்த வரை, இவர் முழுமையாக மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார். பாலியல் பண்புகளை வெளியில் கூச்சமில்லாமல் பேசுகிறார். வெறித் தன மாக அடிப்பது, உடைப்பது என வரையறையின்றி நடந் து கொள்கிறார்.

மருத்துவமனையில் இவரை சேர்த் து இலவச சிகிச்சை அளிக்க முடி யுமா? என் அம்மா எங்களை பிரிந் து, எங்க ஆயா வீட்டில் உள்ளார்.

தினமும் தற்கொலை செய்து கொ ள்ளலாம் போல் தோ ன்றுகிறது. இவ்வளவு கஷ்டத்திலும் படித்துள் ளேன். அதனால், ‘நாம் ஏன் சாக ணும்; என் தம்பி, தங்கைக் காக வாழ்வோம்ஸ’ என வாழ்கிறேன் அம்மா. 12வயதில் இ ருந்து, 23வயதுவரை எந்தவொரு தவறும்செய்யாமல், எங்கள் வாழ்க்கை நரகமாக இருக்கிறது.

நாங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ உத வுங்கள்.

உன் தந்தை, சந்தேகமில்லாமல் மனநோயால் பாதிக் கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏழு லட்சம் பேர் கடுமை யான மனநோயாலும், 70 லட்சம் பேர் சற்றே கடுமை குறைந்த பொதுவான மனநோயாலும், 15 லட்சம் பேர் குடிபோதை மற்றும் போதை பொருள் உபயோகிப்பதா ல் ஏற்படும் மனநோயா லும் பீடிக்கப்பட்டிருப்ப தாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. நீண்ட நாள் நோயால் பீடிக்கப்பட்டுள் ளோர், எளிதாக மன அழு த்தத்துக்கு உள்ளாவர்.

சரிஸ உன் அப்பா விஷயத்துக்கு வருவோம்:

* வெளிநாட்டில் நீண்ட நாள் தங்கி விட்டார். வெளிநா ட்டுக்கு பணிக்கு வரும் பெண்களுடன் தொடர்பு வைத் துள்ளார். ஆனாலும், தான் மனைவிக்கு தேவை இல் லாதவன் ஆகி விட்டாமோ என்றும், அவள் யாருடனா வது தொடர்பு வைத்திருப்பாளோ என்கிற உறுத்தல் உன் தந்தை மனதை சதா அரித்துக் கொண்டு இருக்கிற து. நீயும், உன் தம்பியும்கூட வேலைக்குபோய் சம்பாதி க்கிறீர்கள். அதனால், பொருளாதாரரீதியாககூட, தான் குடும்பத்துக்கு தேவையாயில்லாத வன் ஆகிவிட்டோமோ என்கிற பய மும் உன் தந்தையை மன நோயாளி யாக்கியிருக்கிறது.

* வெளிநாட்டில் ஏஜன்ட் வேலை பா ர்த்து, கடன் பட்டு, அடிபட்டு வந்திரு க்கிற கோபத்தை, உங்களிடம் உன் தந்தை காட்டுகி றாரோ என்னவோ!

* இந்திய ஆண்களுக்கு, குறிப்பாக, தமிழகத்து ஆண்க ளுக்கு எந்த பொருளாதார, சமூக பிரச்னை ஏற்பட்டா லும், அவர்கள் வடிகாலாக பயன்படுத்துவது அவர்களி ன் மனைவிமார்களைத் தான். பெண்களின் பாதுகாவ லர்களாக, முதலாளிகளாக, கடவுள்களாக தம்மை பாவித்துக் கொள்கின்றனர் ஆண்கள். மனைவிமாரை ஒரு வளர்ப்பு பிராணியை விட, இழிவாக நடத்துகின்ற னர்.

காவல் துறையினர் உன் தந் தையிடம் பணம் வாங்கி, உன் அம்மா மீதும், தம்பி மீதும் எப் .ஐ.ஆர்., போட்டிருக் கின்றனர். உன்தந்தையின்மீது புகார் மனு தயாரித்து, மாவட்ட காவல்து றை கண்காணிப்பாளரை சந்தித்து கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுப்பர்.

இருதரப்பு சொந்த பந்தங்கள், ஊர் பெரியவர்களை வை த்து, உன் தந்தையின் துர்நடத்தை பற்றி, பஞ்சாய த்து பேசுங்கள். உன் தந்தை குணமாகும் வரை, மனநல காப்பகத்தில் வைத்து, உரிய சிகிச்சை அளிக்க அனு மதி பெறுங்கள்.

உன் தந்தை, உன் தாயாரிடம் மற்றும் குடும்ப அங்கத்தி னரிடம் தவறாக நடப்பதை, பேசுவதை புகைப்படம் ம ற்றும் வீடியோஎடுத்து, அந்த ஆதாரத்தை காவல்துறை க்கு அளிக்கும் புகாருடன் இணையுங்கள். உன் தந்தை உங்களில் யாரையாவது அ டித்து காயப்படுத்தியிருந்தா ல், மருத்துவரிடம் காட்டி மருத்துவ சான்றிதழ் பெற்று அதையும் கோர்ட்டில் தாக்க ல் செய்யுங்கள்.

குடும்ப நல நீதிமன்றத்தில் உன்தந்தையிடமிருந்து விவாகரத்துகோரி, உன்தாயை மனு போடச்சொல். உன் தந்தைக்கு எதிரான காவல்து றை நடவடிக்கைகளை, மேலும் கடுமையாக்க ஒரு கிரிமினல் வக்கீலிடம் ஆலோசனை பெறுங்கள். புகார் மனுக்களை அவரது மேற்பார்வையில் தயாரி யுங்கள்.

வீட்டிற்குள் கலாட்டா செய்ய உன் தந்தை வந்தால் அவரை வெளியே விரட்டி கதவை சாத்துங்கள். ‘மன நல காப்பகத்துக்கு போய் தகுந்த சிகிச்சை பெற சம்மதித்தால், நீ எங் களுக்கு தந்தையாக இருக்க சம்ம திப்போம்; இல்லையென்றால், நீ யாரோ நாங்கள் யாரோஸ’ என எ மோஷனல் பிளாக்மெயில் செய்யு ங்கள்.

உன் வேலையும், உன் தம்பி வேலையும் நிரந்தரமாக வாழ்த்துகள்