Home இரகசியகேள்வி-பதில் என் கண்ணெதிரேயே, அக்காவின் கையில், உதட்டில், கன் னத்தில் முத்தம்…

என் கண்ணெதிரேயே, அக்காவின் கையில், உதட்டில், கன் னத்தில் முத்தம்…

62

என்பெற்றோருக்கு, நான் கடைசி மகள். எனக்குஒரு அக்கா, அண்ணன் உள்ளனர். அக்காவிற்கு வயது 35ம், அண்ணனுக்கு 32 வயதும் ஆகிறது. அண்ணன் பொறுக் கித்தனமான நட்பு வட்டாரத் தில் சிக்கி சீரழிந்து, வீட்டை விட்டே சென்று விட்டான்.
இப்போது பிரச்னை அக்காவைப் பற்றித்தான். இத்தனை வய தாகியும் அக்காவிற்கு திருமணமாகவில்லை. ஜாதகம் சரி யில்லாமை, குள்ளமான உருவம் என்று,
சில குறைகளை தன்னிடம் வைத்துக் கொண்டு, வருகிற மாப்பிள்ளைகளிடம் இருக்கும் தேவையற்ற குறைகளை சொல் லி, திருமணத்தை தட்டிக் கழித்து க் கொண்டே வருகிறாள்.
அக்கா தன்னைவிட ஏழு வயது சிறியவன் ஒருவனிடம் பழகி வரு வதும் ஒரு காரணம். ஆரம்பத்தி ல், அவனை சகோதரன் என்று சொல்லியவள், தற்போது, தோழ னாக பதவி உயர்வு கொடுத்திருக் கிறாள்.
என் கண்ணெதிரேயே, அக்காவின்கையில், உதட்டில், கன்ன த்தில் முத்தம் தந்ததை பார்த்த பிறகு, இவர்களின் உறவு நார்ம லானது இல்லை என்று தெரி ந்து விட்டது. அவனிடம் தனி மையில் இதைப்பற்றி கேட்டத ற்கு, உண்மையை ஒத்துக் கொ ண்டான்.
அவனின் உறவு இல்லை என்றால் இறந்து விடுவதாக, மறை முகமாக அவனை மிரட்டி வைத்திருக்கிறாள் என் சகோதரி. இதற்கு பயந்து அக்காவிடம் காதலனாக பழகிக் கொண்டிரு க்கிறான்.
அவனை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால், என் பெற்றோருக்கு பல உதவிக ளை செய்து, நல்லபிள்ளையாக பெ யர் வாங்கியுள்ளான். அவர்க ளை நம்ப வைப்பது சிரமம்.
தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பொம்மையாக அவ னை ஆட்டிப் படைக்கிறாள் என் சகோதரி. திருமணத்தி ற்கு ஒத்து வருகிற மாதிரி எந்த வரனாவது வந்தால் உடனே, தன க்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று, கடிதம் எழுதி அனுப்பி விடுகிறாள்.
இதனால், அவமானப்படுவது பெற்றோரும், நானும்தான். என க்கு இறந்து விடலாம் அல்லது வீட்டை விட்டு சென்று, ஏதாவ து ஆசிரமத்தில் தங்கி விடலாம் என்றும் அடிக்கடி தோன்றுகிற து. என் சகோதரியாலேயே என் திருமணம் தடைப்பட்டு வரு கிறது.
இந்த நிலையில் நான் என்ன செய்தால் என் பிரச்னை தீரும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவள் நான். எனக்கு இப்படி ஒரு சகோதரி கிடைத்தது என் துரதிர்ஷ்டம் தான்.
நான் சுயதொழில்செய்து, கணிசமான வருவாயில் என் தேவையை, நானே பூர் த்திசெய்து கொள்பவளாக இருக்கிறேன். தயவு செய்து நல்ல முடிவை எனக்குத் தாருங்கள்.
– பெயர் வெளியிட விரும்பாத வாரமலர் வாசகி. மகளே…
முதலில் நீயும், உன் குடும்பத்தினரும் தெரிந்து கொள்ள வே ண்டியது…
இறந்து விடுவது அல்லது தற்கொலை செய்து கொள் வது என்ற நினைப்போ, முடிவோ எந்த பிரச்னைக் கும் தீர்வு அல்லது மருந்து ஆகாது…
வாழ்க்கை என்பது தன்னம்பிக்கையோடு எதிர்நோக்குவது தான். மற்றவர்களிடம் அன்பையு ம், பாராட்டையும் பெற்று, அவை களை பன்மடங்காக மற்றவர்கட் கு தந்து உதவுவது. நல்ல வாழ்க் கை கிடைக்க வேண்டுமானால், மீனுக்காக காத்திருக்கும் கொக் கைப் போல் காத்திருக்கத்தான் வேண்டும். சரி… உன் அக்காவின் பிரச்னைகளை சற்றே அலசுவோம்…
ஜாதகம் சரியில்லை, குள்ளமான உருவம், மாப்பிள்ளையி ன் தேவையில்லாத குறைகளைச் சுட்டி க் காண்பித்து திருமணத்தை தள்ளிப் போடுகிறாள்… அவளிடம் இது போன்ற குற் றம் குறைகளை கண்ட நீ, ஏன் இப்படி செய்கிறாள் என்று ஒரு நிமிடம் யோசனை செய்திருக்கிறாயா?
ஒருவேளை, இந்த வயதிற்குமேல், திரு மணம் செய்துகொள்ள தயக்கமாகவும், குழந்தைகளைப் பெற்று, எப்படி வளர்த் து ஆளாக்கப் போகிறோம் என்ற பயமாக கூட இருக்கலாம்.
அதனால், இப்படி ஒரு ஆணுடன் மிக, ‘பாதுகாப்பாக’ தானும் சந்தோஷம் அடைந்து, அந்த பையனையும் சந்தோஷப்படுத் தகூட முயலலாம். என வேதான் உன் அக்கா, அந் த பையனை எல்லா வகையிலும், ‘சப்போர்ட்’ செய்து, தன் காரியத் தை சாதித்துக்கொள்கிறாள். அது கிடைக்காதபட்சத்தி ல் தான் இறந்து போவதா க கூறி, மிரட்டுகிறாள்.
அக்கா தன்னை விட, ஏழு வயது குறைவான ஒரு ஆணுடன் பழகுவது, உனக்கு பிடிக்கவில்லை. இதை, உளவியல் ரீதி யாக ஆராய்ந்து பார்த்தால், உன்னிடமும், உன் குடும்பத் தாரிடமும் கிடைக்காத ஏதோ ஒன்று, அந்த ஆணி டம் கிடைக்கிறது என்று கூட சொல்லலாம். மேலும், இயற்கையிலேயே உன் அக் கா, மற்றவர்களை, ‘டாமி னேட்’ செய்பவளாக கூட இருக்கலாம். அதனால், ‘செ க்சில் கூட’ ஆண் ஒருவன் தம்மை அப்படி செய்து விடக் கூடாது என்று இப்படி நடந்து கொள்ளலாம்.
அந்தந்த வயதில் நடப்பவைகள் சரியாக நடந்திருந்தால், இந்த பிரச்னைக்கே இடமிருந் திருக்காது… சரி, இனி நீ என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வீட்டிற்கு இனி நீ வரக்கூடாது என்று உடனடியாக அந்த பையனிடம் கூறுவது சரியாக இருக்காது. அது இன்னும் பிர ச்னையை ஊதி விடுவது போ ல ஆகி விடும்.
அந்த பையனிடம் தனியாக, ‘இது நடைமுறைக்கு சாத்திய மில்லை அவளை, நீ திருமணம் செய்யமுடியாது. சமுதாய ம் ஏற்றுக் கொள்ளாது… வீண் பிரச்னைதான் வளரு ம்…’ என்று புரியும்படி சொ ல்ல வேண்டும்.
உன் அக்கா ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறாள், ‘டாமினேட்’ செய்கிறாள் என்பதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மூல காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.
மிக விரைவில், அந்த பையனின் உறவை, உன் அக்கா துண் டித்துக் கொள்ள, அவளுக்கு ஆலோசனை தர வேண்டும். ஏனெனில், உன் அக்காவிடம், ‘பழகுகிற மாதிரி’ எத்தனை, ‘அக்காக்களிடம்’ பழகு கிறார் என்று யாருக்கும் தெரியாது. முக்கியமாக, இந்த மா திரி, ‘தம்பி’களிடம் இருந்துதான், எய்ட்ஸ் என்ற ஆட்கொல் லி நோய் விரைவாக பரவுகிறது. இதனால், குடும்ப பெண்க ள் கெட்டு விடுகின்றனர் என்ற உண்மையையும், அவளிடம் மிக பக்குவமாக எடுத்துச் சொ ல்ல வேண்டும்.
அதிர்ச்சியாக கூட இருக்கலா ம் மகளே… இப்படி பிரச்னை களை எழுதியிருக்கும் நீயும் கூட ஒருமுறை மனதளவில் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவைகள் அனைத்தையும் நீயே செய்ய முடியுமானால் செய்… ஒருவேளை உன் அக்காவும், குடும்பத்தினரும் உன் னை ஏதோ காரணங்களால் ஏற் றுக் கொள்ளவில்லை என் றால், கவலைபடவேண்டாம். நல்ல மனநல ஆலோசகர், வீட்டில் உள் ள, உனக்கு பிரியமான, மனம் விட்டு பேசக்கூடிய பெரியவர்கள் அல்லது உன்னிடமோ அல்லது உங்கள் குடும்பத்தினரிடமோ அக் கறை கொண்டுள்ள பொது நபரிடம் பேசி, அவர்களின் மூல மாக, பிரச்னைக்கு தீர்வுகாணமுயலலாம்.
அதன்மூலம் உன் அக்காவிற்கும், உனக்கு ம் விரைவில் திரு மணம் ஆகி, நீங்கள், உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கும் நன்னாளை, நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.