Home பெண்கள் அழகு குறிப்பு என்றென்றும் அழகு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

என்றென்றும் அழகு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

13

beauty_001-150x150பெண்கள் அனைவருக்குமே தாங்கள் அழகாய் ஜொலிக்க வேண்டும் என்று தான் ஆசை.
அதற்காக எத்தனையோ செயற்கை முறைகளை பின்பற்றி இருப்பர், ஆனால் அன்றாடம் நம் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளின் மூலம் மிக எளிதாக அழகு தேவதையாய் வலம் வரலாம்.

* தண்ணீர் இன்றியமையாத ஒன்று, உடலில் சிறிது நீர்ச்சத்து குறைந்தாலும் கூட தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடும். நீங்கள் ஏ.சி அறையில் இருந்தால் கூட அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நிறைய தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருங்கள், இது உங்கள் மேனியிலும் பிரதிபலிக்கும்.

* ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள் உடலை நோயிலிருந்து பாதுகாத்து கொடுப்பதுடன், தோல் சுருக்கங்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.

* நன்கு சத்தான காய்கறிகளை, வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சூரிய ஒளி நன்மை பயக்கும் என்றால், அதிக நேரம் வெயிலில் சுற்றித் திரிவது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

* திருமண விழாக்கள், பண்டிகை காலங்களுக்கு மேக்கப் போடும் போது இயற்கையான முறையில் உருவான பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.

* உணவுகளில், பானங்களில் அதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அதீத சர்க்கரையால் தோல் சுருக்கங்கள் ஏற்படலாம்.

* அவகோடா பழங்கள், ஆலிவ் ஆயில், நட்ஸ் மற்றும் மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், சரும பொலிவிற்கு நல்லது.

* தினமும் ஒரு டம்ளர் நீருடன் எலுமிச்சை கலந்து குடியுங்கள், அடிக்கடி பழச்சாறுகள் அருந்துவதும் சிறந்தது.

* யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம், கவலை ஏதும் இருந்தால் உங்களுக்கு பிடித்த நபரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

* தினமும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பது மிக அவசியம், தினமும் 7-8 மணி நேர தூங்க வேண்டும்.

* உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையில்லாத நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மேனி பளபளப்பாகும்.