Home பெண்கள் உணவு உடல் எடையை அதிகரிக்க ட்ரை பண்றீங்களா? இந்த சூப்பர் ஃபுட்ஸ் சாப்பிடுங்க…

எடையை அதிகரிக்க ட்ரை பண்றீங்களா? இந்த சூப்பர் ஃபுட்ஸ் சாப்பிடுங்க…

33

நிறைய மக்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிலர் மிகவும் ஒல்லியாக, பார்ப்பதற்கே அழகை இழந்து காணப்படுவார்கள. ஏனெனில் அவர்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லை. ஆகவே அவர்கள் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்து, நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள. அதிலும் அவர்களுக்கு எந்த ஒரு உணவுத் தடையும் இல்லை. ஆனால் உணவுத் தடை இல்லை என்பதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா என்ன? இல்லை, அத்தகையவர்களும், கண்டதை சாப்பிடாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை சாப்பிட வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

 

பாஸ்தா– உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் பாஸ்தா ஒரு சிறந்த உணவு. இந்த உணவு இத்தாலியன் உணவுகளில் நிறைய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சுவையான உணவு. இதை சாப்பிட்டால், வயிறு மட்டும் நிறையாது, உடலில் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடல் எடையை விரைவில் அதிகரிக்கச் செய்யும். ஆகவே தினமும் ஒரு பௌல் பாஸ்தாவை உணவில் சேர்த்து வாருங்கள், உடல் எடை சூப்பராக அதிகரிக்கும்.

 

சீஸ் அல்லது பன்னீர்– பால் பொருட்களில் ஒன்றான சீஸ் அல்லது பன்னீர், உடல் எடையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களாகும். அதில் அதிகமான கலோரிகள் நிறைந்துள்ளன. மில்க் கிரீமால் செய்யப்படும் இந்த சீஸ், விரைவில் செரிமானமடையும். ஏனெனில் அதில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இந்த சீஸை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், எளிதில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

பீன்ஸ்– சைவ உணவுகளை மட்டும் உண்பவர்களுக்கு புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள பீன்ஸ் தான் சிறந்தது. ஏனெனில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை உண்டால், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். அந்த புரோட்டீன் இந்த பீன்ஸில் உள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

முந்திரி – ஒரு கையளவு முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால், நன்கு அழகான ஒரு ஃபிகராக, உயரத்திற்கு ஏற்ற எடையை விரைவில் பெறலாம். இந்த முந்திரியில் உடலுக்கு தேவையான எண்ணெய் இருக்கிறது. மேலும் கலோரிகளும் அதிகம் உள்ளது. வேண்டுமென்றால் இதனை ரெசிபிகளில் சேர்த்து சாப்பிடலாம், பிடிக்காதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

ஆளி விதை மற்றும் எண்ணெய் – இந்த விதையில் செரிவூட்டப்பெற்ற கொழுப்புக்கள் மற்றம் உடலுக்கு தேவையான இதர எண்ணெய்கள் இருப்பதால், உடலில் எடையை விரைவில் கூட்டும். இதனை உணவில் சேர்த்து சாப்பிடுவதால், எந்த ஒரு பக்கவுளைவும் ஏற்படாமல், உடல் எடை அதிகரிக்கும். மேலும் ஆளி விதை உடலில் ஏற்படும் காயங்களுக்கு ஏற்ற சிறந்த மருந்து. இதனை தினமும் சமையலில் சேர்த்தால், உணவில் சுவை கூடுவதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.