Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடுப்பாக மார்பகத்தை பெற செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

எடுப்பாக மார்பகத்தை பெற செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

98

உலகத்தில் உள்ள எந்த பெண்ணாக இருந்தாலும் மார்பகங்கள் கல்லைப் போன்று திடமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக சிலர் அறுவை சிகிச்சையும்கூட செய்துகொள்கிறார்கள்.

ஆனால் வீட்டில் இருந்தபடியே எந்த செலவும் செய்யாமல் இயற்கையான முறையில் மார்பகங்களை எடுப்பானதான மாற்ற முடியும். அதற்கு என்னமாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

தோள்பட்டையை சிறிது விரைப்பாகவும் உறுதியாகவும் வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் மார்புக்கு நேராகக் கோர்த்து உடலை இறுக்கமாக வைத்து நிற்க வேண்டும். இதைத்தொடர்ந்து 20 முறை செய்து பாருங்கள்.

அடுத்ததாக, செய்யக்கூடிய இந்த புஷ்-அப் பயிற்சி நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலனை விரைவாகவே உங்களுக்குக் கொடுக்கும்.

சுவரிலிருந்து 4 அடி தள்ளி, இரண்டு கால்களையும் இணைத்துக் கொண்டு நில்லுங்கள். பின் இரண்டு கைகளையும் சுவரில் விரித்து வைத்து புஷ்-அப் செய்யுங்கள். இதை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

ஒரு நாற்காலியை இழுத்து முதுகுக்குப் பின்புறமாக போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் நாற்காலியின் நுனியில் வைத்துக்கொண்டு, கீழே உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது நாற்காலியில் இருந்து கைகளை எடுக்கவோ முதுகை வளைக்கவோ கூடாது.

தம்புல்ஸ் எடுத்தாலும் நல்ல பலன் கிடைக்கும். தம்புல்ஸை மார்புக்கு நேராக இறுக்கமாக வைத்து கைகளை நன்கு விரைப்புடன் வைத்து செய்ய வேண்டும்.

நாற்காலியை போட்டு, அதன்மேல் கால்களை வைத்துக் கொள்ளுங்கள். உடல்பகுதியை தரையில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும். குப்புறப்படுத்திருக்க வேண்டும். கால்கள் இருக்கும் உயரத்துக்கு கைகளை மட்டும் தரையில் ஊன்றி, உடலைத் தூக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.

இந்த எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து தினமும் மேற்கொண்டாலே போதும் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உங்களால் அடைய முடியும்.