Home அந்தரங்கம் உறவில் உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்!

உறவில் உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்!

31

கால்சியல் சத்து குறைபாட்டினால் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்சியம் சத்திற்கு தேவையான பால், தயிர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றை ஈடு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் பாராதைராய்டு குறைந்தால் கால்சியத்தின் அளவு குறைகிறது. கால்சியல் சத்து குறைந்தால் எலும்புகள் வலிவிழந்து பின்னமடையும். ஆஸ்டியோ போரோஸிஸ் ஏற்படும். எலும்புகள் முறியும் வாய்ப்புகள் அதிகமாகும். தசை இறுக்கம், இழப்பு உண்டாகும். பற்கள் நிறமழிந்து, பற் ‘சொத்தைகள்’ ஏற்படும். அடிபட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும்.

மன அழுத்தம்

உடலில் கொழுப்பு சரியான அளவில் இருந்தால், கால்சியம் சுலபமாக ஜீரணமாகும். புரதச்சத்தும் கால்சியத்தை கிரகிக்க உதவும். பாலில் உள்ள லாக்டோஸ் ஜீரணிக்க ‘லாக்டேஸ்’ என்ற என்ஜைம் உதவுகிறது. இது சரியான அளவில் இருக்க வேண்டும். பலருக்கு, பால் ஒவ்வாமல் போகலாம். லாக்டேஸ் குறைந்தால் கால்சியம் ஜீரணம் தடைப்படும். மன அழுத்தம் இருந்தால் கால்சியம் கிரகிக்கப்படுவதை குறைத்து, அதிக கால்சியம் வெளியேறுமாறு செய்யும். சில மருந்துகளின் உபயோகமும் கால்சியத்தை ஜீரணிக்க தடை செய்யும்.

வைட்டமின் டி

கால்சியம் குறைபாட்டுக்கு மற்றொரு காரணம் விட்டமின் ‘டி’ குறைவு. இதனால் ‘ஆஸ்டியோ – மலாசியா’ ஏற்படுகிறது. எலும்புகளில் வலி தோன்றும் – அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் எலும்பு சரிவர அமையாமல் போகலாம். கால்சியத்தை கிரகிக்க விட்டமின் டி அவசியம். இது எவ்வாறு இதை செய்கிறது என்பது சிக்கலான விஷயம். எனவே விட்டமின் டி குறைந்தால் கால்சிய கட்டுப்பாடு போய்விடும். இதனால் தான் சில கால்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்படுகிறது. கால்சியம் குறைபாடு சரியாக வைட்டமின் டி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

குறையும் ஈடுபாடு

இரத்தத்தில் கால்சியம் அளவை கட்டுப்படுத்துவது தைராய்டு ஹார்மோனும், கால்சிடோன்னும், ஆகும். பார – தைராய்டு ஹார்மோன் ஜீரண மண்டலம் அதிக கால்சியத்தை கிரகிக்க உதவுகிறது. பார – தைராய்டு ஹார்மோன் அளவு குறைந்தாலும் கால்சியம் குறைபாடு ஏற்படும். கால்சியம் சத்து குறைபாடினால் உடலில் சத்து குறைந்து அதிக சோர்வு, தூக்கமும் ஏற்படும். இதுவே தாம்பத்ய உறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது.

கால், தலைவலி

கால்சியம் சத்து குறைந்தால் கால் எழும்புகள் வலுவிலக்கும். தலைவலி ஏற்படும். இந்த உடல்வலியானது இதயவலிகளில் கொண்டு போய் விடுகிறது. இந்த வலிகளே செக்ஸ் ஈடுபாடு குறைவதற்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயநோய்கள்

கால்சியம் குறைபாட்டினால் பெண்களுக்கு இதயநோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதயம் சரியாக வேலை செய்து ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பினால் மட்டுமே அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்கும். ஆண், பெண் பாலியல் உறுப்புகளுக்கும் ரத்தம் சரியாக பாய்ந்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் ஈடுபாடு ஏற்படும்.

கால்சியம் குறைபாட்டை போக்க பிரண்டையை துவையல் செய்து சாப்பிடலாம். அதேபோல் பால் பொருட்கள் போன்றவையும், சோயாபால் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.