Home பாலியல் உறவின் போது வலி ஏற்பட காரணம்

உறவின் போது வலி ஏற்பட காரணம்

41

வாழ்க்கையை இனிமையாக கொண்டு செல்வதில் உடலுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உடலுறவின் போது சந்தோஷம் மட்டும் கிடைப்பதில்லை, வலியும் தான் ஏற்படும். அதிலும் உடலுறவின் போது பெண்களுக்கு பிறப்புறுப்பிலும், அடி வயிற்றிலும் அதிகப்படியான வலி ஏற்படும். அதுமட்டுமின்றி, சிலருக்கு பிறப்புறுப்பில் எரிச்சல் கூட ஏற்படும்.
அப்படி வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா…?இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் தான். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால், உடலுறவின் போதும் பிரச்சனையை உணரக்கூடும். உதாரணமாக, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்தால், தசைகளில் பிடிப்புகள் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் இறுக்கமான ஜீன்ஸ் அணிவது, ஈஸ்ட்ரோஜன் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தில் இருந்தால் கூட உடலுறவின் போது வலி ஏற்படும். சரி, இப்போது உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்….
இறுக்கமான ஜீன்ஸ்
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால், உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்படும். எப்படியெனில் இறுக்கமான ஜீன்ஸ் பிறப்புறுப்பில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்துவதோடு, புண்ணையும் ஏற்படுத்திவிடும். இதனால் உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்படுகிறது. எனவே எப்போதும் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் பிறப்புறுப்பு புண்ணாக இருந்தால், எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் புண்ணானது விரைவில் ஆறும்.
குறைவான ஈஸ்ட்ரோஜன்
உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தாலும், உடலுறவு கொள்ளும் போது வலியை உணரக்கூடும். எனவே ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்

பொதுவாக மன அழுத்தம் இருக்கும் போது உடலுறவு கொண்டால் மனம் ரிலாக்ஸ் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் மன அழுத்தத்தில் இருக்கும் போது, பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமடைவதால், உறவு கொள்ளும் போது வலியை உணர நேரிடுகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தாலும், உடலுறவின் போது வலி ஏற்படும். இதற்கு முறையற்ற குடலியக்கம் மட்டும் காரணமல்ல, உடலின் கீழ் பகுதி வசதியில்லாமல் இருப்பதும் தான் காரணம்.
ஆல்கஹால்
ஆல்கஹாலை அளவாக குடித்தால், ரொமான்ஸ் எண்ணமானது அதிகரிக்கும். ஆனால் அதுவே அளவிக்கு அதிகமானால், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற எண்ணம் எழும். இந்நிலையில் உறவு கொள்ளும் போது, அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுப்பதால், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து, உடலுறவு கொள்ளும் போது வலியை ஏற்படுத்துகிறது.
கருப்பை வீக்கம்

மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு, கருப்பையானது சற்று வீங்கும். இப்படி வீங்கியிருக்கும் போது உடலுறவு கொள்வதால், அது உடலுறவு கொள்ளும் போது வயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.
வறட்சி
காலநிலை மாற்றம் சருமம் மற்றும் உதடுகளை மட்டுமின்றி, பிறப்புறுப்பையும் தான் வறட்சியடையச் செய்யும். அப்படி பிறப்புறுப்பில் வறட்சியானது அதிகரித்தால், அது சில நேரங்களில் அங்கு வெடிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே வறட்சியாக இருக்கும் போது, பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைக்க உதவும் க்ரீமை தடவ வேண்டும்.
தொற்றுகள்
பெண்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படும். இதனால் அந்த பகுதியில் எரிச்சல், அரிப்பு மட்டுமின்றி, உறவு கொண்டால் வலியையும் ஏற்படுத்தும்.
வலி
அளவுக்கு அதிகமாக ஓடினாலோ அல்லது பின்புறமாக விழுந்தாலோ, இடுப்பு தசைகளில் வலி ஏற்படுவதால், உடலுறவு கொள்ளும் போது அதிகமான வலி ஏற்படுகிறது.
வாக்சிங்
பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள இடம் மிகவும் சென்சிட்டிவானது என்பதால், அந்த இடத்தில் வாக்சிங் செய்தால், அது எரிச்சல், அரிப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தும். இந்நிலையில் உறவு கொள்ளும் போது வலி ஏற்படும். எனவே பிறப்புறுப்பை சுத்தம் செய்ய ட்ரிம்மிங், லேசர் அல்லது ஷேவிங் முறையை பயன்படுத்துவது நல்லது….!