Home அந்தரங்கம் உறவின் போது ஐ லவ் யூ சொல்லுங்க..!!

உறவின் போது ஐ லவ் யூ சொல்லுங்க..!!

28

குடும்பம் என்றால் சின்ன சின்ன சண்டைகள் அவ்வப்போது ஏற்படுவது சகஜம்தான். அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் வாழ்க்கையை சந்தோசமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் எதிர்பாராத தருணங்களில் இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பது இல்லற பூந்தோட்டத்தில் சந்தோச பூக்களை பூக்கச் செய்யும். எந்த மாதிரியான சர்ப்ரைஸ் தரலாம் என்று பட்டியலிட்டுள்ளனர் உளவியல் நிபுணர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
காலை நேரத்தில் உங்கள் துணை எழுந்திருக்கும் முன்பாக எழுந்து காபி அல்லது கலந்து கொண்டுபோய் படுக்கையில் இருந்து எழுப்புங்கள். விடுமுறை நாட்களில் ப்ரேக்ஃபாஸ்ட் செய்தும் அசத்தலாம். கார் காதவை திறந்து உங்கள் துணைக்கு தெரியாமல் ரோஜா பூங்கொத்தை வைத்துவிடுங்கள் அது உங்கள் துணைக்கு இன்ப அதிர்ச்சியைத் தரும்.

உங்கள் துணையின் மெயில்பாக்ஸ்சில் பூக்களால் நிரப்புங்கள். அது உங்களின் அபரிமிதமான காதலை உங்கள் துணைக்கு உணர்த்தும். அவ்வப்போது ரொமான்டிக் மெசேஜ் அனுப்புங்களேன்.

உங்கள் துணை அலுவலகத்தில் அதிக நேர பணியில் மாட்டிக்கொண்டாரா? நேராக அலுவலகம் சென்று பிக் அப் செய்துகொண்டு டின்னருக்கு அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து அசத்துங்களேன்.

பணிச்சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட்டு துணையின் லஞ்ச் சாப்பிடுங்கள். எதிர்பாராத தருணங்களில் துணையின் அலுவலகம் சென்று மதிய உணவிற்கு பிக் அப் செய்து கொள்ளுங்களேன். என்றைக்காவது துணையானவர் உணவை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டால் உணவை கொஞ்சம் ஸ்பெசலாக தயார் செய்து கொண்டு போய் கொடுங்களேன். மாலையில் அலுவலகம் விட்டு வரும் போது பளிச் புன்னகையுடன் வரவேற்பு கொடுங்கள். சின்னதாய் ஒரு முத்தம் காதோரம் ஐ லவ் யூ சொல்லியும் அசத்தலாம்.

உங்கள் துணைக்கு பிடித்த இடத்திற்கு திடீர் என்று அழைத்துச்செல்லுங்கள். அன்று முழுவதும் அவருக்கு பிடித்தது போன்ற விசயங்களை செய்து அசத்துங்களேன். மாதம் ஒருமுறையாவது சினிமா, ஹோட்டல் என்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் துணை எதிர்பாராத தருணங்களில் அவரை அழைத்துச் சென்று அசத்துங்கள்.

எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஐ லவ் யூ சொல்லி அசத்துங்களேன். உங்கள் துணைக்கு உங்கள் மீதான காதல் அதிகரிக்கும். சின்ன சின்ன காதல் கவிதைகளை அவ்வப்போது எழுதுங்கள். அதை எதிர்பாராத தருணங்களில் பரிசளியுங்கள். காதலை உணர்த்த எந்த மாதமாக இருந்தால் என்ன? அடிக்கடி அன்பான பரிசளியுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன சர்ப்ரைஸ் சந்தோசங்கள்தான் இல்லற வாழ்க்கையை என்றைக்கும் இளமையோடு வைத்திருக்கும் நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்.