Home பாலியல் உடல் சுகத்துக்காக பாதியில் கழட்டிவிட்டு போன மனைவி, மீண்டும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளலாமா? ஊரான்...

உடல் சுகத்துக்காக பாதியில் கழட்டிவிட்டு போன மனைவி, மீண்டும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளலாமா? ஊரான் சொல்றது இருக்கட்டும்! உண்மையில் நடந்தது!

246

அலுவலக நண்பரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னர் முறைதவறிய உறவில் ஈடுபட்டு, இன்றைக்கு மீண்டும் சேர்த்து வாழ விரும்புகிறேன் என்கிறார். அன்றைக்கு யாரும் வேண்டாமென எவனோ ஒருவனுக்காக, குடும்பத்தை தூக்கிஎறிந்துவிட்டு சென்றவர், இன்னைக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் சேர்த்து வாழ விரும்புகிறாரென தெரியவில்லை. இத்தனைக்கும் என் நண்பருக்கு, சிறு வயதில் இருந்து காதல் கூட கிடையாது. சேர்த்து வைத்திருந்த மொத்த பாசத்தையும் மனைவியிடம் மட்டுமே வெளிப்படுத்தினார். அப்படி இருந்தும், என்ன குறைச்சல்னு தெரியல.

திருமணத்திற்கு முன்பே நண்பரின் மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்திருந்தும், அதனை மறைத்து பெண் வீட்டார் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். தாலி கட்டிய ஒரே மாதத்தில் அவனோடு ஓடிவிட்டாள். அது டைம் பாஸ் காதல் போல, மோகம் முடியும் வரை உறவு இனித்திருக்கும். மோகம் தீர்ந்த பிறகு, கொடுமைப்படுத்தி அனுப்பியிருக்கான் காதலன். ஒரு மாதம் நண்பரோடு குடும்பம் நடத்தியிருந்தாலும், அதில் அவர் காட்டிய அன்பை நினைத்துப்பார்த்து, மீண்டும் நீங்களே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சொல்லி காலில் வந்து விழுந்திருக்கிறார்.

நண்பருக்கு ரொம்பவுமே பெரிய மனசு. யாரு தான் தப்பு பண்ணாம இருக்கோம். வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் எல்லோரும் நல்லவங்க தான். அவளே மீண்டும் வந்து காலில் விழுகிறாள் என்றால், மனம் திருந்தி வாழ நினைக்கிறாள் என்று அர்த்தம். இனி வாழ்க்கை முழுக்க துரோகம் நினைக்க மாட்டாள் என்று சொல்லி ஏற்றுக்கொண்டார். மன்னிப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட போவதில்லை. அதற்காக மன்னித்தே ஆக வேண்டும் என்று கூறவில்லை, ஆனால் மன்னித்தால் நன்றாக இருக்கும்.

ஒருவேளை நண்பர் அவரது மனைவியை வேண்டாமென நிராகரித்துவிட்டால், அவர் திருந்தி வந்தது அர்த்தமற்றதாக மாறி விடும். முன்னர் செய்த தவறை திரும்ப செய்யவோ அல்லது வேறு தவறான முடிவு எடுக்கவோ வாய்ப்புண்டு. எனக்கு என்னவோ நண்பர் எடுத்த முடிவு சரி எனத்தான் மனதுக்கு படுது. நம்பி போன காதலன் ஏமாற்று பேர்வழி என்று தெரிந்த பின்னர், மனம் திருந்தி மீண்டும் கணவனிடமே வந்ததால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு சில பெண்கள் அடுத்து அடுத்துன்னு போயிட்டே இருப்பாங்க. அதனை லிஸ்டில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். அவங்க ஸ்பெசல் கேஸ்.