Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடை குறையவேயில்லைன்னு கவலையா? அப்போ இந்த பழக்கங்கள் எல்லாம் உங்ககிட்ட இருக்கா?

உடல் எடை குறையவேயில்லைன்னு கவலையா? அப்போ இந்த பழக்கங்கள் எல்லாம் உங்ககிட்ட இருக்கா?

13

உடல் உழைப்பு இல்லாதது, சரியான உணவுமுறைகளை பின்பற்றாதது தான் உடலில் தங்கிடும் கொழுப்புகளுக்கு காரணம். நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களினால் எங்கெல்லாம் கொழுப்பு சேரும் என்று தெரிந்து கொள்ளுங்கள். தவறு என்றே தெரியாமல் தினமும் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் என்ன தான் டயட் இருந்தாலும் உடல் எடை குறையாததற்கு இது முக்கிய காரணமாகும்.

படுக்கை : படுக்கையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது தூங்குவது போன்றவற்றால் வயிற்றில் கொழுப்பு சேரும். நம்மையும் அறியாமல் கூன் முதுகிட்டு உட்கார்ந்துவிடுவோம் இதனால் முதுகு வளைவத்தன்மையுடன் காணப்படும்.

விடியற்காலை : சிலர் காலையில் முழித்தாலும் படுக்கையை விட்டு எழுந்தரிக்காமல் புரண்டு கொண்டேயிருப்பர். பெட்ஷீட்டை மூடி அறையை இருட்டாக்கி அதிக நேரம் புரள்வதும் தவறு! அதிகாலையில் சூரிய ஒளி கிடைத்தால் அது நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்திடும்.

காலை உணவு : சராசரியாக ஒருவர் 600 கலோரிகளை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வேலைப்பளூ,அவசரம், டயட் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி காலை உணவை குறைவாக எடுத்துக் கொண்டாலும் அது உடல் எடையை அதிகரிக்கச்செய்திடும். இன்னும் சிலர் காலை உணவையே தவிர்ப்பதை பழக்கமாக்கி கொண்டிருப்பர். இது முற்றிலும் தவறானது.

அதிக தூக்கம் : ஒருவர் பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கினால் அது நமக்கு சோம்பலையே உருவாக்கிடும். அதே போல குறைந்த தூக்கம் ஸ்ட்ரஸ் ஏற்படுத்திடும். சோம்பலாக இருப்பதால் சுறுசுறுப்பாக எந்த வேலையினையும் செய்யப் பிடிக்காமல் ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பது தேவையின்றி அதிக உணவுகளையும் எடுக்கத்தோன்றிடும். சராசரியாக ஒருவர் ஏழு மணி நேரம் தூங்குவது ஆரோக்கியமானது.

வெயிட் : தினமும் வெயிட் செக் செய்வது. இது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும் ஆராய்ச்சியாளர்கள் இது நல்ல பலனை கொடுப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். தினமும் உங்களின் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதிக்க வேண்டும். இது உங்களையே உற்சாகப்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுப்பதற்கு முன்னால் யோசிக்க வைக்கும். மனரீதியாக இது வெற்றியடையும் என்கிறார்கள்.