Home பெண்கள் பெண்குறி உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் அந்தரங்க உறுப்பு கசிவு

உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் அந்தரங்க உறுப்பு கசிவு

33

குறிப்பாக அந்தரங்க உறுப்பு பற்றிய தகவல்கள் பெண்களிடையே ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கின்றன. நீங்கள் உடலை பற்றி ஆர்வமாக தெரிந்து கொண்டால், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள முடியும். அந்தரங்க உறுப்பு கசிவு என்பது தற்போது உலகளவில் 85% மக்களால் பேசப்படும் விஷயங்களில் ஒன்று. இது உண்மை தான் என்றாலும், அந்தரங்க உறுப்பு கசிவுகளை பற்றி பெண்கள் அவர்களின் தாய் அல்லது நெருங்கிய தோழிகளிடம் கூட பேச தயங்கவும், வித்தியாசமாகவும் உணர்க்கிறார்கள். இதை பற்றி பேச வெட்கப்பட்டு கொண்டு உங்கள் உடலை பற்றி தெரிந்து கொள்வதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் சொந்த உடலை பற்றி தெரிந்து கொள்ளவும் பேசவும் வெட்கப்பட தேவையில்லை.

அந்தரங்க உறுப்பு கசிவு என்றால் என்ன?

அந்தரங்க உறுப்பு வெளியேற்றம் என்பது கர்ப்பப்பை வாய் திரவம் மற்றும் அந்தரங்க உறுப்பில் உருவாகும் கழிவுகள் போன்றவை கலந்த திரவ கலவையாகும். இது உங்கள் உடலில் தினசரி ஏற்பட கூடிய ஒன்றாகும். இது பல வண்ணங்களில் இருக்கும் என்பதை நீங்கள் கவனித்திருந்தால் உணர்வீர்கள். இது உங்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்றால், சாதாரணமானது தான்.

இவை சாதாரணமானவையாக இருந்தாலும், சில கழிவுகள் உங்களுக்கு நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவது அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கழிவானது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அழுகிய துர்நாற்றத்துடன் இருக்கும். இந்த நோய் தொற்றானது பெரும்பாலும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்றவற்றால் ஏற்படுத்தப்படுகிறது.

4 வகையான அந்தரங்க உறுப்பு கசிவுகள்

1 வெள்ளை நிற வெளியேற்றம்

இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது பெண்களின் மாதவிடாய் சுழற்சி துவக்கத்திலும், இறுதியிலும் ஏற்பட கூடியது. உங்களுக்கு இது அரிப்பை ஏற்படுத்தினாலோ அல்லது இந்த வெள்ளை நிற கசிவு அடர்த்தியாக பன்னீர் போன்று இருந்தாலோ, நீங்கள் ஈஸ்ட் தொற்றுகளால் பாதிக்கப் பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அது எப்போதும் போல் சாதாரணமாக இருந்தால், உங்கள் கருமுட்டை வளர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும்.

2 பழுப்பு அல்லது சிறிதளவு இரத்தத்துடன் கூடிய கசிவு

இது உங்கள் மாதவிடாய் சுழற்சி காலங்களோ அல்லது மாதவிடாய் சுழற்சியின் இறுதியிலோ இருந்தால் சாதாரணமானது தான். உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பின் சில சொட்டு இரத்தங்கள் உங்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். இது மெல்லியதாகவும், பழுப்பு நிறமுடையதாகவும் உங்கள் உடலில் இருந்து வெளியேறும்.

நீங்கள் சாதாரண நாட்களில் பழுப்பு அல்லது இரத்த கலந்த வெளியேற்றத்தை கண்டால், நீங்கள் பாதுகாப்பில்லாமல் கொண்ட உடலுறவால் கர்ப்பம் அடைந்திருக்க்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். அதுவே நீங்கள் கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் இருந்தால், இது உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

3 மஞ்சள் நிற கசிவு

இது உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். இந்த வெளியேற்றம் அதிக அளவில் அடர்த்தியாகவும், மோசமான துர்நாற்றத்துடனும் இருந்தால் உங்களது அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். இது ‘ட்ரிகோமோனியாசிஸ்’ என்று அழைக்கப்படும் தொற்றுநோய் ஆகும்.

4 பச்சை நிற கசிவு

இந்த கசிவு உங்கள் அந்தரங்க பகுதியின் அசாதாரண அறிகுறியாகும். இது பொதுவாக தடித்தும், மெலிதாகவும் காணப்படும். இது மோசமான அழுகிய துர்நாற்றத்துடன் சமாளிக்க முடியாததாக இருக்கும். வைட்டமின் மருந்துகள் எடுத்து கொள்பவர்களுக்கு ஏற்படுவதாக பலர் கூறுகின்றன.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை கண்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.

1 நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால்

2 உங்கள் அந்தரங்க உறுப்பில் மோசமான துர்நாற்றம் ஏற்பட்டால்

3 அந்தரங்க உறுப்பு வெளியேற்றத்தின் வடிவத்தில் மாற்றம் (அடர்த்தியாக இருத்தல்)

4 மாதவிடாய் காலத்தில் சரியான இரத்த போக்கு இல்லை என்றால்

5 அரிப்பு ஏற்பட்டால்