Home பாலியல் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

53

நாம் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகள் மட்டும் முக்கியமன்ற நம் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் கல்விக்கே விவாதம் செய்திடும் நம் ஊரில் இருப்பவர்கள் மத்தியில், வயது வந்தோர் உடலுறுவு கொள்ளாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி :
உங்களின் இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் அது உங்கள் உடலிலுள்ள நோய்யெதிர்ப்பு சக்தியை குறைத்திடும். எளிதாக நோய்த்தொற்று ஏற்படவும், அது மிக வேகமாக பரவவும் காரணமாகிடும்.

ஸ்ட்ரஸ் :
உடலுறவு என்பது மன இறுக்கத்தை போக்கும் ஓர் மாமருந்து என்று கூட சொல்லலாம். ஆரோக்கியமான உடலுறவு என்பது உங்கள் உடலில் சுரக்கும் மன இறுக்கத்திற்க்கான ஹார்மோன்கள் சுரப்பதை குறைத்திடும். இதனால் அன்றாட வேலைகளில் ரிலாக்ஸாக இருக்கலாம்.

பாலியல் உணர்வு :
உடலுறவு கொண்டு நீண்ட இடைவேளி ஏற்பட்டால் , அது பாலியல் உணர்சிகளை தூண்டுவதில் சிக்கல்கள் உண்டாகும். ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைவதும், பெண்களுக்கு மனக்கிளர்ச்சி ஏற்படுத்துவதையும் குறைத்திடும்.