Home ஜல்சா உடலுறவின்போதே இறந்துபோகும் விலங்குகள்

உடலுறவின்போதே இறந்துபோகும் விலங்குகள்

48

உடலுறவு என்பது தங்களையே மறக்கக்கூடிய அளவுக்கு இன்பத்தைத் தரக்கூடிது என்பது தான் நமக்குத் தெரியும். ஆனால் உடலுறவின் போது உயிரே போய்விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?…

ஆம். சில உயிரினங்கள் தங்களுடைய துணையுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இறந்துவிடுமாம்…

கேட்கவே ஆச்சர்யமாகவும் கவலையாகவும் இருக்கிறதல்லவா?… அப்படி என்னென்ன உயிரினங்கள் இதுபோல் உடலுறவின்போது இறந்துபோகும் தெரியுமா?

பச்சோந்திகள் இனப்பெருக்கத்தின் போது அளவுக்கதிகமாக சுரக்கப்படுகிற ஹார்மோன்களால் பசசோந்திகள் இறந்துவிடுகின்றனவாம்.

ஆஸ்திரேலிய ரெட்பேக் என்னும் வகையைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் தங்களுடைய துணையுடன் உறவில் ஈடுபட்டு முடித்தவுடன், இறந்துவிடுகின்றன. அதாவது இந்த சிலந்தி வகைகள் பாலியல் தற்கொலை செய்து கொள்கின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆண்டிசினஸ் என்னும் எலிகளைப் போன்று உருவம் கொண்ட உயிரினங்கள் இடைவேளை இல்லாமல் 14 மணிநேரம் உறவு கொண்ட பின் இறந்துபோகுமாம்.

இந்த விலங்கினம் உடலுறவின் போது உண்டாகிற மன அழுத்தம், நோயெதிர்ப்பு மண்டலத்தை அழித்து, கல்லீரல் தொற்றுக்களை ஏற்படுத்தி கிருமிகளின் தாக்கம் காரணமாக ஆண் உயிரினம் மட்டும் இறந்து போய்விடுமாம்.

இவை பார்ப்பதற்கு எலியைப் போலவே அச்சு அசலான உருவத்தோற்றம் கொண்டிருக்கின்றன.

லிட்டில் ரெட் கலூட்டா என்ற இந்த உயிரினம் புல்வெளிகளில் மலைப் பகுதிகளில் வாழக்கூடியது. இது பாலூட்டி வகையைச் சேர்ந்தது.

இந்த உயிரினம் உடலுறவின் உச்சக்கட்டத்தின் போது இறந்துவிடுமாம். அதிலும் குறிப்பாக, வயிற்றில் பை போன்ற அமைப்புடைய ஆண் உயிரினம் மட்டுமே இறந்து போகுமாம்.

பிரேசிலை இருப்பிடமாய்க் கொண்ட இந்த ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ் இன விலங்கில் ஆண் விலங்கு உடலுறவுக்குப் பின்னும் பெண் உயிரி பிரசவத்துக்குப் பின்னும் இறந்து போய்விடுமாம்.