Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடலுக்கு எனர்ஜி அதிகரிக்க உடற்பயிற்சி

உடலுக்கு எனர்ஜி அதிகரிக்க உடற்பயிற்சி

24

captureவிளையாட்டு வீரர்களை போல் எப்போதும் உடலை வலுவாக வைத்திருக்க விரும்புபவர்கள் எளிமையான உடற்பயிற்சியை மேற்கொண்டால் நிச்சயம் நம் உடல் உறுதியாக இருக்கும்.

மவுண்ட்டன் க்ளைம்பர் (Mountain climber exercises ) :

* இரண்டு கைகளையும் சற்று அகட்டி தரையில் ஊன்றி படுக்கவும்.

* மலை ஏறுவது போன்ற நிலையில் இடது காலை முதலில் மடக்கி படத்தில் உள்ளபடி முன்பாத விரல்களால் தாங்கி நிற்கவும்.

* அதேபோல் வலது காலை நீட்டி முன் பாத விரல்களால் தாங்கி நிற்கவும்.

* இதேபோல் கால்களை மாற்றி மாற்றி 10 முறைகள் செய்யவும்.

பலன்கள் : உடல் முழுவதும் வலுப்பெறும். முக்கியமாக இடுப்பு மற்றும் தொடை தசைகளுக்கு நல்லது.

ஸ்டெப் அப் (Step Up Exercises):

* ஒரு பென்ச் அல்லது படிக்கட்டின் மேல் ஏறவும்.

* இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி இடது காலை மட்டும் உயர்த்தவும்.

* இரண்டு கைகளையும் மேலே உயர்த்தவும்.

* அதன் பிறகு வலது காலை கீழே இறக்கி இடது காலை உயர்த்தவும்.

* இதேபோல் கால்களை மாற்றி மாற்றி 10 முறைகள் செய்யவும்.

பலன்கள் : இடுப்பு, தொடை மற்றும் கெண்டைக்கால் சதைகள் வலுவடையும்.

ஜம்ப் ரோப் (Jump Rope Exercises):

* ஒரு கயிறை எடுத்து கொள்ளவும்.

* 10 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒரே சீரான வேகத்தில் ஸ்கிப்பிங் செய்யவும்.

பலன்கள் : உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு நல்லது. உடலில் சக்தி அதிகரிக்கும்.