Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Beauty Tips உச்சி முதல் உள்ளங்கால் வரை உங்களை அழகுபடுத்தும் தேங்காய் எண்ணெய்

Tamil Beauty Tips உச்சி முதல் உள்ளங்கால் வரை உங்களை அழகுபடுத்தும் தேங்காய் எண்ணெய்

31

உங்களோட தலைமுடிய பளபளப்பாக வச்சிருக்க மட்டும்தான் தேங்காய் எண்ணெய் பயன்படுதுன்னு நினைக்கிறீங்களா? அது முடியோட வளர்ச்சியைத் தூண்டுவதில் மிக வேகமாக வேலை செய்யும். தேங்காய் எண்ணையுடைய பயன்பாடு தலைமுடிக்குத் தேய்ப்பதோடு நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரவு தூங்குவதற்கு முன்பாக,தலைக்குத் தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்துக்கொண்டு தூங்கச் செல்லுங்கள்.காலையில் எழுந்ததும் ஒரு காட்டன் துண்டை வெந்நீரில் முக்கி எடுத்து தலையில் சுற்றிக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்திற்கு அதை எந்த தொந்தரவும் செய்யாமல் இருங்கள்.இரண்டு மணி நேரம் கழித்து வெந்நீரில் தலைக்குக் குளித்தபின் பாருங்கள், தேங்காய் எணெ்ணெய் செய்திருக்கும் மாயத்தை! அது உங்கள் கூந்தலை பட்டுபோல் மின்னச் செய்திடும்.

தேங்காய் எண்ணெய் பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் கொல்லக்கூடியது. ஆகையால் அது உங்கள் பொடுகுத் தொல்லைக்கு நல்ல தீர்வைத் தரும். தேங்காய் எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து அதன்பின் கூந்தலை அலசுங்கள். இப்படி செய்து வந்தால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது நீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொண்டு அதனுடன் 500 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கொதிக்க பின் ஆறவிடவும். அந்த எண்ணெயை பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு கூந்தலின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து இரவு முழுக்க வைத்திருங்கள். அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் தலைக்குக் குளியுங்கள். இப்படி செய்து வந்தால் நரைமுடி வராமல் தடுக்க முடியும்.

கூந்தல் மட்டுமல்ல உங்கள் மேனியைப் பளபளப்பாக்கும் ரகசியமும் தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. அரை கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது தேனும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உங்கள் சருமம் டாலடிக்கும்.

உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு உங்களை எரிச்சலூட்டுகிறதா? அதற்கும் தேங்காய் எண்ணெயால் தீர்வு உண்டு. பாதங்கள் முழுவதிலும் தேங்காய் எண்ணெயைத் தடவுங்கள். பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு நன்கு தேய்த்து கழுவுங்கள். குதிகாலில் உள்ள வெடிப்புகள் காணாமல் போய்விடும். தேய்த்து கழுவிய பின் பாதங்களைத் துடைத்துவிட்டு மீண்டும் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டபின் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இரவு முழுக்க அப்படியே வைத்திருங்கள். உங்கள் பாதங்கள் மினுமினுக்கும் பொலிவைப் பெறுவது நிச்சயம்