Home ஆரோக்கியம் இதயம் & இரத்தம் உங்க இதயத்தை எப்படி பாத்துக்கிறீங்க?

உங்க இதயத்தை எப்படி பாத்துக்கிறீங்க?

24

இதயநோய் என்பது இன்றைக்கு பெரும்பாலானோரை தாக்கும் நோயாக உள்ளது. இதயாநோய் வராமல் தடுக்க ஏழு முக்கிய அம்சங்களை பின்பற்றுமாறு அமெரிக்காவில் உள்ள இதயநோய் பாதுகாப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதயத்தை பாதுகாக்க

ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்புபவர்கள் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கக் கூடாது

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்த படியே வேலை பார்க்க்க் கூடாது. ஆக்டிவாக இருக்கவேண்டும்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடல் எடையை ஒரே சீராக வைத்திருப்பது அவசியம், அதேபோல் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஏழு முக்கிய அம்சங்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதயத்தைக் கொல்லும் புகையிலை

புகையிலைப் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் 20 சதவிகிதம் பேர் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். பெரும்பாலோனோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புகையிலையில் உள்ள நிகோடின்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடல் பருமன்

அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு இந்தியாவிலும் பெரும்பாலேனோர் உடல் பருமானால் பாதிக்கப்பட்டு நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் இதயத்தை பாதிக்கும் முக்கிய காரணியாகும். எனவேதான் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பு அளவும் கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.