Home பெண்கள் அழகு குறிப்பு உங்கள் அழகை மேலும் மெருகூட்டும் அழகுக் குறிப்புகள்

உங்கள் அழகை மேலும் மெருகூட்டும் அழகுக் குறிப்புகள்

9

அழகுபெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும்.

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். தமிழ் பெண்களைப் பொறுத்த வரையில் கலாச்சாரம் கலந்த, நீளமான கூந்தலும், மென்மையான வசீகரமான சருமத்தை கொண்ட தோற்றம் உடையவர்களாக விளங்குவதற்கும், அவர்களின் ஆசைகளை குறைந்த செலவில் நிறைவேற்ற ஊக்குவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அழகூட்டும் வைட்டமின்கள்:

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். ”பி” வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டாயமாகின்றது.

சிறுவயதிலேயே முதிய தோற்றம் ஏற்படுவதை ”தயமின் என்ற பி1 வைட்டமின்” தடுக்கும் . வைட்டமின் பி1 சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது.