Home பாலியல் இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்?

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்?

50

images-11காலத்தே பயிர்செய் என்பார்க ள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமேஇருக்கும். ஆனாலும்
இது ஒன்றும் தலை போகும் பிரச்ச னை அல்ல என்பதே டாக்டர்க ளின் கருத்து.
இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட் டிப்படைத்திருக்கும். இதை யாரு ம் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கி யப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
சிலருக்கு 12-15 வயதில் தொடங் கிய சுய இன்பத்தை விட முடியாம ல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவ ர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ் க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.
இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன…?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைக ளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வய தில்வரும் மிகச்சாதாரண பிரச்சினை தான் இது. அதிலிருந்து தப்பி விடுபவ ர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையி ல் இருப்பார் கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.
சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையா னவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.
நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழி தான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உ ணர்வுக ளை, செயற்கையாக நாம் வெளியே ற்றுகிறோம், அவ்வளவுதான். இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உற வின் போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியா து.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன் பவம் அனுபவிக்க வே ண்டும் என்று தோன் றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவ து ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.
சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்க ளால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திரும ணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொட ருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.
இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் வி டாது. உங்களது மனதை ஒரு நிலை ப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்லபயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடி யாக நிறுத்தி விட முயற்சிக்காதீர் கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்க ம் கவனத்தை திருப்ப முயற்சியுங்க ள். அப்படியும் முடியவில்லை என்றா ல் செய்து விடுங்கள்.
நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப் பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுக ளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.
தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோச னை கேட்கலாம். அவர்கள் உங் களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அது போன்றவற் றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந் தணு வெளியேறிவிடும். அப்படிப்படவ ர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களு க்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலி னரும் இதை உரிய முறையில் அணுகி னால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக் கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
மொத்தத்தில் இதுபெரிய பிரச்ச னை யே அல்ல, மாறாக உங்களது நம்பி க்கைக்கு விடப்படும்சவால் , அவ்வ ளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.