Home ஆரோக்கியம் இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது… முன்கூட்டியே எப்படி வரவழைப்பது?..

இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது… முன்கூட்டியே எப்படி வரவழைப்பது?..

30

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். இதற்கு ஆங்கில மருந்துக்களை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு, ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாதீர்கள். மாதவிலக்கு விஷயத்தில் மட்டும் அல்ல எதற்காக மாத்திரைகளைப் பயன்படுத்தினாலும் பலவித பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட இந்த இயற்கை வழியை பின்பற்றலாம்.

சப்ஜா விதை

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.
வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை – தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!
தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான – ஆரோக்கியமான வழி இருக்கு

காலையில வெறும் வயிற்றில் கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் எதுவானாலும் சாப்பிடனும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். இது உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

உங்கள் #மாதவிடாயை #முன்னால் வரவழைக்க
இந்தியாவில் மத வழிபாடுகள் அல்லது திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவை நடக்கிற போது, மாதவிடாய்ப் பெண்கள் விலக்கப்படுகின்றனர்.

இந்த சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
இங்கே சில சுலபமாக கிடைக்கக் கூடிய இயற்கை உணவுகள் உங்களுக்கு “உஷ்ணத்தை” உடலில் ஏற்படுத்தி, உங்கள் மாதவிடாயை முன்பாகவே வரவைப்பவை கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் செல்ல வேண்டிய திருமண நிகழ்ச்சி அல்லது உங்கள் விடுமுறைக்கு முன்பே முடிந்து விடும்.

கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்.

எள், வெல்லம் ரெண்டுமே #சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, #இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.

பப்பாளி

உங்கள் உடலில் அதிக வெப்பம் உருவாக்குவதால் பப்பாளி மாதவிடாயை முன்னால் வரவழைப்பதற்கான மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இந்த பழத்திலுள்ள கேரோடோன், உங்கள் ஹார்மோன் ஈஸ்டிரோஜனைத் தூண்டி, அதன் மூலம் உங்கள் மாதவிடாயை வெகுசீக்கிரம் வர தூண்டுவதில் உதவுகிறது.

வெல்லம்

எப்போதும் சமையலறையில் கிடைக்கக் கூடிய வெல்லம், உங்கள் மாதவிடாயை முன்பாகவே தூண்டுவதில் சிறந்த வீட்டு மருத்துவமாகும். எள் விதைகளுடன் வெல்லத்தைச் சாப்பிடவும் அல்லது ஒரு டம்ளர் இஞ்சிச் சாறுடன் வெல்லத்தை, வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முன்பாகவே வரவழைப்பதில் உதவும் என்று நம்பப்படுகிறது.

மாதுளை

உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீக்கிரம் வரவழைக்க சில நாட்களுக்கு மாதுளை சாறை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும் அல்லது ஒரு டம்ளர் (மாதுளைச் சாறுடன் கரும்புச் சாறு) கலவைச் சாற்றை ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கவும்.

கேரட்

புதிய கேரட்டுகள் (அல்லது பூசணி – கரோட்டின் நிறைந்தது) அல்லது ஒரு நாளைக்கு 2-3 முறை கேரட் சாற்றை குடிக்கவும், இதிலுள்ள் கேரோடிங்கள் ஈஸ்டிரோஜன் உறபத்தியை ஊக்குவித்து அதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை முன்னால் வரவைக்கின்றது.

கேரமாவிதைகள்

கேரம் விதைகள் அல்லது வெந்தய விதைகளின் சாற்றை ஒரு டமளர் அருந்தினால், அது கூட உங்கள் மாதவிடாய் சுழற்சியை சில நாட்கள் முன்னால் கொண்டு வருவதில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எள்விதைகள்

நீங்கள் ஒரு ஸ்பூன் எள்விதைகளை வெல்லத்துடன் உங்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன்பே சாப்பிடலாம் அல்லது ஒரு ஸ்பூன் எள் விதைகளை சூடு தண்ணீரில் தினமும் 2 முறை சாப்பிடடால் மாதவிடாய் சீக்கிரம் வரும்.

அன்னாசிப்பழம்

இது திறம்பட செயல்பட தெரிந்த, நல்ல வெப்ப/உஷ்ணத்தைத் தூண்டும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது அதிக அளவு உண்ணும் போது உங்கள் மாதவிடாய் சீக்கிரமாக வந்து விடும்.

மஞ்சள்

நீங்கள் எதிர்பார்க்கும் தேதிக்கு முன்னரே மாதவிடாய் வரும் வாய்ப்பை அதிகரிக்க, அதற்கு 15 நாட்களுகு முன்பிருந்தே காலையிலும், மாலையிலும் கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து குடித்து வந்தால், எதிர்பார்த்த தினத்தை விட 5 நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.