Home பெண்கள் அழகு குறிப்பு இப்படி உங்களுக்கும் முகச்சுருக்கம் வருதா?… உடனே இத அப்ளை பண்ணுங்க…

இப்படி உங்களுக்கும் முகச்சுருக்கம் வருதா?… உடனே இத அப்ளை பண்ணுங்க…

27

பெண்களில் பெரும்பான்மையானோர் முகத்தை அழகாக்குகிறேன் என்ற பெயரில் பார்லருக்குப் போய் காசை அள்ளிக் கொடுப்பதோடு, ஏற்கனவே உள்ள அழகையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

பார்லரின் உடனடியாக உங்கள் முகத்தை சிவப்பாகக் காட்டுவதற்காக ரசாயனங்கள் கலந்த கண்ட கண்ட க்ரீம்களையும் பயன்படுத்துவதால், மிக வேகமாகவே தோல் சுருக்கங்கள் அடைந்துவிடகின்றன.

சரும செல்கள் சிதைவடைவதால் இதுபோன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. சரி… பார்லருக்கும் போகக்கூடாது. முகச்சுருக்கங்களும் போக வேண்டும். அதற்கு என்னதான் செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்.

வீட்டிலேயே முகச்சுருக்கங்களை சரிசெய்யும் இயற்கை வழிகள் இருக்கின்றன.

முட்டை

சரும அழகை மெருகூட்ட பயன்படும் பொருட்களில் ஒன்று தான் முட்டையின் வெள்ளைக்கரு. சரும சுருக்கத்தைப் போக்கும் தன்மையுடையது. இதில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது தளர்ந்த சருமத்தை இறுக்கமடையச் செய்யும்.

வெள்ளரிக்காய்

சரும சுருக்கத்தை மறையச் செய்யும் தன்மை கொண்ட மற்றொரு பொருள் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காய் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்றவை அதிக அளவில் உள்ளன.

அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பதோடு, சரும சுருக்கங்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

தயாரிக்கும் முறை

தோல் நீக்கிய வெள்ளரி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, அத்துடன் தனியாக பிரிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு பிளண்டரில் போட்டு அடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

இந்த கலவையை சுருக்கமுள்ள முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு போதிய புரத சத்துகள் கிடைக்கப்பெற்று, புத்துணர்ச்சி அடைவதால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சரும சுருக்கம் மறைய ஆரம்பிக்கும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் வேகமாக மாயமாய் மறைவதைக் காணலாம்.