Home சூடான செய்திகள் இந்த 5 தவறுகளை நிறுத்துங்கள்…

இந்த 5 தவறுகளை நிறுத்துங்கள்…

26

682133111relationship-500x500இல்லறம் 24×7 சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தனி ப்ரோக்ராம் தான் எழுத வேண்டும். பரமசிவன் வாழ்விலேயே பல சண்டைகள் வந்திருக்கிறது. எனவே, சண்டைகள் இல்லாத இல்லறத்தை நாம் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

ஆனால், 24×7 சண்டையிட்டுக் கொண்டே இருப்பது மனிதனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். பொதுவாக, பெண்கள் தான் புலம்புவார்கள் என ஓர் கருத்து இருக்கிறது. ஆனால், ஆண்களிடமும் ஓர் புலம்பல் போபியா இருக்கிறது.

ஆம், மனைவி என்னதான் அன்பாக இருந்தாலும், நண்பர்களோடு பேசும் போது, “அட, என் பொண்டாட்டியும் அப்படி தான் மச்சான். ஒரே தொல்லை…” என குற்றம் கூற ஆரம்பித்து விடுவார்கள்.

சும்மா எங்களை பற்றியே குற்றம் கூறாதீர்கள், முதலில் உங்களது இந்த ஐந்து தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லறம் தானாக சிறக்கும் என்கின்றனர் பெண்கள்…

தவறு #1
பொறாமை! ஆண்கள், தங்களுக்கு பிடித்த வேறு பெண்களை பற்றி பேசுவார்கள். அல்லது அந்த தன்னை விரும்புவது போல தெரிகிறது, என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதை பெருமையாக பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், தங்களுக்குரியவரை வேறு பெண்ணுடன் ஒப்பிடுவது பெண்களுக்கு சற்றும் பிடிக்காத விஷயம் என்கின்றனர் பெண்கள்.

தவறு #2
எங்களை பொருட்படுத்தாமல் இருப்பதை நிறுத்த வேண்டும். எந்த செயலாக இருந்தாலும், சிறு காரியமாக இருப்பினும், எங்களிடம் ஒரு வார்த்தை / விருப்பம் / கருத்து கேட்பது ஒன்றும் தவறில்லையே. இதே, போன்று ஏதேனும் ஒரு காரியத்தை உங்களை பொருட்படுத்தாமல் நாங்கள் செய்தால், உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

தவறு #3
நாங்கள் உங்களுக்கு பிடித்ததை அல்லது உங்களுக்காக என்று ஏதேனும் செய்கிறோம் என தெரிந்தும் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நகர்வது மனதை மிகவும் புண்படுத்தும். புகழ்ந்து பேச வேண்டாம். குறைந்தபட்சம் நன்றாக இருக்கிறது என கூறுதல் அல்லது ஓர் புன்னகையாவது செய்யலாம்.

தவறு #4
தங்கள் பின்னாடியே சுற்றி வந்துக் கொண்டிருக்க வேண்டாம். அன்பும், அக்கறையும் முக்கியம் தான். ஆனால், அதையும் தாண்டி இல்லறம், குடும்ப தலைவன் என்ற பொறுப்பு, கடமை போன்றவற்றில் தொய்வின்றி நடந்துக் கொள்ள வேண்டும்.

தவறு #5
தவறுகள் நடப்பது இயல்பு., அதை குத்தி காண்பித்துக் கொண்டே இருக்க கூடாது. தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அல்லது கற்றுத்தர வேண்டும். எதுமே இல்லாமல் வெறுமென திட்டிக் கொண்டே இருப்பது எந்த பயனும் அளிக்காது.