Home ஆரோக்கியம் Doctoors sex Tips இதுமாதிரி உங்களுக்கும் நிறைய தழும்பு இருக்கா?… இந்த ஒரு பொருள்...

Doctoors sex Tips இதுமாதிரி உங்களுக்கும் நிறைய தழும்பு இருக்கா?… இந்த ஒரு பொருள் போதும் அதை சரிசெய்ய…

27

உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் என்ன உடல் எடையை அதிகரித்துவிடும் என்ற பயத்தால் சிலர் தவிர்ப்பதுண்டு. ஆனால் அதே உருளைக்கிழங்கை வீணாக்காமல் நம்மை அழகுபடுத்திக் கொள்ள உபயோகிக்கலாம்.

தலைமுடி மற்றும் முகத்தைப் பொலிவாக்க உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. அதிலும் தொடர்ந்து உருளைக்கிழங்கை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் நெடுநாட்களாக நீங்காத தழும்புகள் கூட மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் நீண்ட நாட்களாக .

உருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பூசினால், முகம் ப்ளீச் செய்தது போல் பளபளக்கும்.
முகத்தில் தோன்றும் பரு அல்லது பருவினால் உண்டான தழும்புகள் ஏதேனும் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நிறத்தைப் போக்கி, நல்ல நிறமாற்றம் உண்டாதவதைக் காணமுடியும்.

உருளைக்கிழங்கு ஜூஸ், தயிர், லெமன் ஜூஸ் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து முகத்தில் தடவி வர, முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்ணுக்குக் கீழுள்ள கருவளையங்கள் ஆகியவை மறைந்துவிடும்.