Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

35

ஒரு மணி நேரம் முறையான உடற்பயிற்சி செய்வதால் தினமும் உடலில் சேரும் கலோரியை, குறைக்க முடியும். உடற்பயிற்சி புத்துணர்ச்சியைத் தரும். மூளை செயல்பாட்டுக்கு உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.

உடல் பருமனைக் குறைக்க சிறந்த வழி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுதான். உடல் எடை குறைப்பதில் நீச்சல் பயிற்சி சிறந்த இடத்தை பெறுகிறது. தினமும் ஒருமணி நேரம் நீந்தினால் 650 கலோரி குறையும். இதில், நடைப்பயிற்சியில் கிடைப்பதைவிட பலன் அதிகம்.

நீச்சல், உடலிலுள்ள எல்லா தசைக்கும் வேலை கொடுக்கிறது. இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுசேர்க்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ‘தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் இதய நோய்கள் ஏற்படாது; ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக இருக்கும்.

கொழுப்பு கூடாது. நீரிழிவு எட்டிப் பார்க்காது. சில புற்றுநோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறையும்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘இந்த அளவு உடற்பயிற்சியே உங்கள் ஆயுளை 3 ஆண்டுகள் அதிகரித்துவிடும்