Home பாலியல் ஆண்-பெண் அந்தரங்கம்: சுய இன்பத்தால் தாம்பத்தியம் பாதிக்குமா?

ஆண்-பெண் அந்தரங்கம்: சுய இன்பத்தால் தாம்பத்தியம் பாதிக்குமா?

41

நான் இருபத்து மூன்று வயது இளைஞன். பள்ளி இறுதி வகுப்பிலிருந்து எனக்கு சுய இன்பம் பழக்கமாகிவிட்டது. அதை என்னால் நிறுத்த இயலவில்லை. திருமணமான பிறகு என்னால் இன்பம் காண இயலுமா? இந்தத் தவறினால் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்?

சுய இன்பம் என்பது கருவில் இருக்கும் குழந்தை முதல், காடு கூப்பிடும் கிழவன் வரை – ஆண், பெண் வித்தியாசமின்றி பலரும் ஈடுபடும் ஒரு சாதாரண செயல்.

அட மனிதர்களை விடுங்கள்! கொரில்லா, சிம்பான்ஸீ, உராங்குட்டான் போன்ற நமது ஒன்றுவிட்ட உறவினர்கள் பலரும் இதில் பலகாலமாய் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் போலவே நமது துாரத்து உறவினரான ஆடு, மாடு, சிங்கம், புலி போன்ற பிராணிகளும்கூட அவ்வப்போது இதில் ஈடுபடுவதாகக் கேள்வி. இப்படி உயிரினங்கள் பலதும் சர்வசாதாரணமாக சுய இன்பத்தில் ஈடுபட, முக்கியமான காரணங்களும் இருக்கின்றன.

பருவம் அடைந்ததும், பாலுறவுகொள்ள உடம்பு தயாரானாலும், பல சமயங்களில் தகுந்த துணை கிடைக்காமல் போக நேரலாம். இதுபோன்ற சூழலில், உயிரினங்கள் இரண்டு விதமாக ரியாக்ட் செய்யலாம்.

ரியாக்ஷன் ஒன்

துணைதான் இல்லையே – இனி ஆசை எதற்கு? அதை விடுத்து வாழப் பழகுவோம் என்றாலோ, ஒருவேளை தொடர்ந்து ஒதுக்கிக்கொண்டே போவதாலோ, ஆசை முழுமையாக அழிந்துவிட்டால்? பிறகு தகுந்த துணை கிடைத்தாலும் பிரயோசனப்படாதே! ஆசை அற்றுப்போனால், வம்சம் வற்றிப்போகும் ஆபத்து நேருமே! இப்படி நேராமலிருக்க, துணை வரும்வரை ஆசையை மிதப்படுத்தி வைத்தால் – பிறகு இனமும் சேரலாம், குலமும் தழைக்கலாம். இப்படி துணை வரும்வரை ஆசையை சிம்மில் வைக்கும் சிம்பிள் குலவள உத்திதான் சுய இன்பம்.

ரியாக்ஷன் டூ

ஆசை இருந்தும் ஆற்ற ஆளில்லையே என்ற ஏமாற்றம், தேவையற்ற மூர்க்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இந்த மூர்க்கத்தனம் எல்லை கடந்தால், கண்மண் தெரியாத ஆவேசமூண்டு, தனக்கும் பிறருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நாச நடவடிக்கைகளில் ஈடுபடும் அபாயமும் உண்டு. இதைத் தவிர்க்கத்தான் நமது மனம், இந்த வேகம் அதிகரிக்கும் முன்பே சுயஇன்பம் என்ற சேஃப்டி வால்வை இயக்கிவிடுகிறது. இவ்வாறாகத் துணையில்லாத சமயங்களிலும், தாபத்தைத் தணித்து விடுவதோடு, மனத்தைச் சாந்தமும் படுத்துவதால், சுயஇன்பம் என்பது முற்றிலும் அகிம்சாவாத செயல். அவ்வப்போது, அவசியத்துக்கேற்ப இதில் ஈடுபடுவது மிகவும் ஆரோக்கியமான வழக்கமே.

இதனால் உங்கள் பிற்காலத் திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் நேராது.