Home உறவு-காதல் ஆண்கள் இப்படிப்பட்ட பெண்ணைதான் திருமணம் செய்ய விரும்புகிறார்களாம்… உண்மையா?

ஆண்கள் இப்படிப்பட்ட பெண்ணைதான் திருமணம் செய்ய விரும்புகிறார்களாம்… உண்மையா?

24

திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான தருணம். ஏனெனில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவருடன் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகிறோம். இது காதல் திருமணம் செய்து கொள்பவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அந்த நபரைப் பற்றி நமக்கு முன்கூட்டியே தெரியும். அது நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை.

ஏனென்றால் காதல் செய்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும் போது, காதலிக்கும் போதே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதால், பிரச்சனை இல்லை.

ஆனால் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கும் போது, திருமணம் செய்து கொள்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாததால், நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் இதுபோன்று இருக்கும்போது தங்கள் வாழ்க்கை பற்றிய சிறு அச்சம் இருக்கத்தான் செய்யும்.

பொதுவாக பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தில், பெண் வீட்டார் தான் மாப்பிள்ளையைப் பற்றி நிறைய விசாரணை செய்வார்கள். ஆனால் தற்போது ஆண்களும் தங்களுக்கு வரும் மனைவியின் குணம் இப்படி இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார்கள்.

பெண்களுக்கு பொறாமை இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக பொறாமை இருந்தால், அது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. மேலும் பொறாமை இருவருக்கிடையேயான வாழ்க்கையின் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.

ஆணை மனைவி தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க நினைக்கலாம். ஆனால் தான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும். தன்னை மீறி எதுவும் செய்யக்கூடாது. தான் சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அப்படியே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு.

எப்போதுமே தன்னுடன் இருக்க வேண்டும், எங்கு சென்றாலும் என்னுடன் தான் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெண்ணாக இருந்தால், அத்தகைய குணம் கொண்ட பெண்ணை ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள்

பெற்றோர்களின் செல்லமாக இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னரும், பெற்றோர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டே, கணவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், ஆண்களுக்கு எரிச்சலும் வெறுப்பும் இயல்பாகவே உண்டாக ஆரம்பித்துவிடும்.

டயட், பியூட்டி கான்சியஸ் என்று சொல்லி ஓரளவுக்கு மேல் ஆண்களைப் படுத்தி எடுக்கக்கூடாது.

ஆண்களுக்கு தன் மனைவிக்கு பிடித்தவாறு மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை கட்டாயப்படுத்தி, இப்படி தான் இருக்க வேண்டுமென்று கட்டளையிட்டால், அத்தகைய பெண்களை அவர்களுக்கு பிடிக்காது. அத்தகைய பெண்களை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள்.

சுயநலவாதியாக இருந்தால் யாருக்குமே பிடிக்காது. அதிலும் கணவனிடமும் அத்தகைய சுயநலத்தை வெளிப்படுத்தினால், பின் அது வாழ்விற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

இந்த காலத்தில் ஆண்களுக்கு தன்னைச் சார்ந்து வாழும் பெண்களை விட, தன்னால் முடியும் என்று தைரியமாக வாழும் பெண்களைத் தான் பிடிக்கும். அதற்காக அளவுக்கு அதிகமான தைரியமும் இருக்கக்கூடாது. ஏனெனில் அது பல நேரங்களில் ஆபத்தில் முடியும். அளவான துணிச்சலும் அளவற்ற அன்பும் கொண்ட பெண்களைத் தான் ஆண்களுக்கு மிக அதிகமாகப் பிடிக்கிறது.