Home ஆண்கள் ஆண்களின் விந்து பரிசோதனை

ஆண்களின் விந்து பரிசோதனை

29

115927987முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடை ப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத்
தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப்பிடிக் கும் விஷயங்கள் ஆண்களுக்கு எக்குறையை அதிக மாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ .
பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்கள் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணு க்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இரு க்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணி க்கையில் எழுபது சதவிகிதமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆணால் ஒரு பெண்ணு க்கு குழந்தை தர முடியும்!
ஆஸ்பெர்மியா (Aspermia)
சில ஆண்களுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக்கூடும். இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia ) என்று அழைக்கிறோம்.
அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின் னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்னரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்றுநீங்கள்சந்தேகம் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான். குழந்தைப்பருவத்திலேயே புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கியவர்களுக்கு விதைகள் செயலற்றுப்போய் விந்துத்திரவத்தை உற்பத்திசெய்ய இயலாமல் போகு ம்.
அஜுஸ்பெர்மியா (Azoospermia)
இன்னும் சிலருக்கு விந்துத் திரவம் உற்பத்தியாகும்… ஆனால் விந்துத் திரவத்தில் உயிரணு ஒன்றுகூட இல் லாமல் இருக்கும். இப்படி உயிரணு அறவே இல்லாமல் பூஜ்யமாக இருந் தால் அந்தக் குறைபாட்டுக்கு அஜுஸ் பெர்மியா (Azoospermia) என்று பெயர்.
யெலிகூஸ்பெர்மியா’ (Eligoospermia)
இன்னும் சிலருக்கோ விந்துத் திரவத்தில் உயிரணுக்கள் இருக்கும். ஆனா ல் அவை வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும். இந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியாது. இந்நிலைக்கு ‘யெலிகூ ஸ்பெர்மியா’ (Eligoospermia) என்று பெயர்.
ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia)
யாருக்காவது விந்தில்உயிரணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவுக்கும் குறைவாக இருந்து, அவை நீந்துகின்ற தன்மையையும் குறைவாகக்கொண்டு இ ருந்தால் அதை ‘ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia) என்று கூறலாம்.

மைல்டு ஒல்கோஸ்பெர்மியா
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை ஓரளவே குறை வாக இருந்தால் அது ‘மைல்டு ஒல்கோஸ்பெர்மியா’
‘மிடில் ஒலிகோஸ்பெர்மியா’ (Middle Oligospermia)
அதேபோல விந்தில் உயிரணுக்களும், செத்துப்போன அணுக்களும் சமநிலையில் இருக்கும் நிலையை ‘மிடில் ஒலிகோஸ்பெர்மியா’ (Middle Oligospermia) என்போம்.
சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ ( Severe Oligospermia)
விந்துத்திரவத்தில் உயிரணுக்கள் மிகக்குறைவாக இருந்து, இறந்துபோன அணுக்களே அதிகம் இருந்தால் அது, ‘சிவியர் ஒலிகோ ஸ்பெர்மியா’ ( Severe Oligospermia) எனப்படும். ஒரு சிலரு க்கு விந்தில் உயிரணுக்களி ன் எண்ணிக்கை விரல்விட்டே எண்ணுகிற அளவுக்கு இருந்து, பிற அனைத்துமே செத்துப்போன அணுக் களாக இருக்கும். அந்நிலையை ‘வெரி சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ என்கிறோம்.
ஆஸ்தெனோஸ்பெர்மியா (Asthenospermia)
சிலருக்கு விந்தில் தேவையான அளவுக்கு உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை நீந்துகிறத்தன்மை மிகக்குறை வாக இருக்கும். (கரு உருவாக நீந்தும் தன்மை முக்கியம்) இது ‘ஆஸ்தெனோஸ்பெர்மியா’ (Asthenospermia).
பயோஸ்பெர்மியா (pyospermia)
விந்துத் திரவத்தில் சீழ் அல்லது ரத்தத்தின் வெள்ளை அணுக்களும் கலந்து இருந்தால் அது ‘பயோஸ்பெர்மியா’ (pyospermia)
யூடூஸ்பெர்மியா
உயிரணுக்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தால் அது ‘யூடூஸ்பெர்மியா.’
கிரிஸ்டோல ஸ்பெர்மியா (Crystolospermia)
உயிரணுக்கள் படிகங்கள் போலக் காணப்படுகிற நிலை இருந்தால் அது ‘கிரிஸ்டோல ஸ்பெர்மி யா’ (Crystolospermia).
யெனிலோஸ்பெர்மியா (Anylospermia)
உயிரணுக்களை வளமாகச் செய்யவேண்டிய மாவுச்சத்து (கார்போஹை ட்ரேட்), வைட்டமின்_ஈ போன்றவை குறைவாக இருந்தால் அது ‘யெனிலோஸ்பெர்மியா’ (Anylospermia).

ஹீமோஸ்பெர்மியா (Haemoespermia)
முறையற்ற செக்ஸ் உறவின் காரணமாக ஆணுக்கு கொனோரியா எனும் பால்வினை நோய் வந்திருந்து உயிரணுக்கள் கருத்தரிக்கச் செய்ய இய லாத நிலையில் இருந்தால் அது ‘ஹீமோஸ்பெர்மியா’ (Haemoespermia).
நெக்ரோஸ்பெர்மியா (Necrozopermia)
விந்தில் உள்ள உயிரணுக்கள் அனைத்துமே இறந்த அணுக்களாக இருந்தால் அந்நிலை ‘நெக்ரோஸ்பெர்மியா’ (Necrozopermia) எனப்படும்.

‘ஒலிகோஸ்மியா’ (Oligospermia)
மேலே குறிப்பிட்டவற்றில் ஆண்களிடம் அதிக மாக இருக்கும் குறை ‘ஒலிகோஸ்மியா’ (Oligospermia) என்ற நிலைதான்.
ஒருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டு கள் சொன்னாலும் கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறு த்துதான் குழந்தை உருவாகிறது.
உயிரணுக்களின் வீரியத்தை வைத்து,
1. அசையாத தன்மையுள்ள உயிரணுக்கள்,
2. வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள்,
3. வேகமற்ற உயிரணுக்கள்,
4. வேகமான உயிரணுக்கள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்டவர்க ளால் தன் மனைவிக்குச் குழந்தை தரமுடியாது (சிகிச் சைக்கு பின்பே முடியும்). மூன்றாவது வகை சிறிது கஷ்டம். நான்காவது வகைதான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’’ என்று தெளிவுப்படுத்துகிறார்