Home ஆண்கள் ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள்

24

man-baby-590-46243இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், “பின் எதற்கு ஆகவில்லை?” என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.

ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக என்னென்னவோ மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.

மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.

ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும். இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது.

உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியை, அளவுக்கு அதிகமாக செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அளவோடு உடற்பயிற்சி செய்தால் போதுமான

ஊட்டச்சத்து உணவுகள்
உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள சிறந்தது. முக்கியமாக வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், விந்தணுவிற்கு மிகவும் நல்லது. மேலும் காஃப்பைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள்
அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஸ்பெர்ம்களை அழித்துவிடும்.

மொபைல் மற்றும் லேப்டாப் எப்போதும் மொபைல்களை காற்சட்டை பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

தளர்வான உள்ளாடை
உள்ளே அணியும் உள்ளாடையை இறுக்கமாக போடாமல், தளர்வாக போட வேண்டும். இது ஒரு மூடத்தனமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.

யோகா
மனஅழுத்தம் இருந்தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலும் புத்துணர்ச்சியடைந்து, விந்தணு உற்பத்திக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.