Home ஆண்கள் ஆண்மை பெருக ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

27

ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.

ஆண்களை விட பெண்களே அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்கின்றனர். உலக அளவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கிறது இதற்குக் காரணம் ஆண்களின் ஆண்மைத்தன்மைதானாம்.

ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்ட்டோடிரோன் என்ற ஹார்மோன் தான் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும். இதுவே அவர்களின் இதயத்தை பலவீனப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறதாம். இதனாலேயே ஆண்களுக்கு ஆயுள் குறைய காரணமாகிறது என்கிறது ஆய்வு. கால்நடைகளுக்கு ஆண்மையை அகற்றுவது போல குறிப்பிட்ட வயதில் ஆண்களின் ஆண்மையை அகற்றிவிட்டால் அவர்களும் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு கொரியாநாட்டில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாக கூறுகின்றனர்.

கொரியர்களின் சராசரி ஆயுட்காலம், 50 வயதுவரை மட்டுமே ஆனால் கொரியா நாட்டில் மன்னர் ஆட்சி நடந்த போது 81 இளைஞர்களின் ஆண்மையை அகற்றிவிட்டு அவர்களை அரண்மனை காவலராக நியமித்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் உயிருடன் இருந்தனர்.

அவர்களின் சராசரி ஆயுள் 70 அக இருந்தது. 3பேர் 100 வயதுக்கு மேலும் உயிருடன் இருந்தனர். எனவே ஆண்மை இல்லாமல் இருந்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று ஆய்வாளர்கள் உறுதிபட சொல்கின்றனர். ஆகையினால் நீண்ட நாள் வாழ ஆசைப்படுபவர்கள் ஆண்மையை அகற்றிவிட்டால் அதாவது ஆண்மைக்கு காரணமாக கருதப்படும் ஹார்மோனை அகற்றிவிட்டால் போதும் என்கின்றனர். ஆனால் ஆண்மை இல்லாம வாழ்வதை இட ஆண்மையோட செத்துப்போறது மேல்னு நம் ஊர் ஆண்கள் சொல்லுவாங்களே!