Home காமசூத்ரா அருமையான செக்ஸ் வாழ்க்கைக்கு செய்ய வேண்டியவை!

அருமையான செக்ஸ் வாழ்க்கைக்கு செய்ய வேண்டியவை!

293

இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமையான சங்கீதமாய் இல்லறம் இனிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி

உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். முக்கியமாக உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உறவில் ஈடுபடக்கூடாது என்கின்றனர். இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

மென்மையான ரசனை

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

எந்திரத்தனம் வேண்டாம்

தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். மேலும் தாம்பத்ய உறவில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது.

மன ஒற்றுமை வேண்டும்

கணவன் மனைவியரிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள், மன இறுக்கங்கள் போன்றவைகளை நீடிக்க விடக்கூடாது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதலோடு அவற்றை பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

அச்சம் தேவையில்லை

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது. வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.

பரஸ்பரம் புரிதல்

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும்