Home சூடான செய்திகள் அமிதாப் பச்சனுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் மரணம்

அமிதாப் பச்சனுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் மரணம்

22

பாலிவுட்டில் வெளியான “பா” படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் நேற்று நடந்த நேபாள விமான விபத்தில் சிக்கி பலியாயினார்.
திரையில் ரஸ்னா உட்பட 50 விளம்பரப்படங்களில் தருணி சச்தேவ் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த “பா” திரைப்படத்தில் அவருடன் இணைந்து பள்ளிக்கூட மாணவியாக தருணி நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் பிருத்வி ராஜ் நடித்த சத்யம், வெள்ளி நட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

தற்போது அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் வெற்றிச்செல்வன் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் தன் தாயுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து பிரதான சுற்றுலா தளமான ஜோம்சோமுக்கு பயணமானபோது மலையில் மோதி விமானம் விபத்தில் சிக்கியது.

இதில் பயணம் செய்த தாயும் குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் மரணமடைந்துள்ளனர்.

விமானம் முற்றிலுமாக சிதைந்துள்ளதால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது.