Home பெண்கள் அழகு குறிப்பு அக்குளில் வரும் கட்டிகளைப் போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

அக்குளில் வரும் கட்டிகளைப் போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

22

pain-under-right-armpitஅக்குள்களில் சிலருக்கு ஏற்படும் கட்டிகள், நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக வருகிறது.

நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் ஏற்படுவது நமது உடல் கிருமிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை குறிக்கும்.

இருந்தாலும் சில நேரங்களில், சிலருக்கு இந்த வீக்கமானது புற்றுநோயாக கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஆனால் நமது அக்குளில் வரும் கட்டிகள் அனைத்துமே புற்றுநோய் கட்டிகள் என்று கூறிவிட முடியாது.

எனவே நமது அக்குளில் வரும் வலி மிகுந்த கட்டிகளைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளது.

இந்த இயற்கை வழிகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல், வலியைக் குறைத்து கட்டிகளை எளிதில் போக்கி விடலாம்.

சுடுநீர் சிகிச்சை

சுடுநீரில் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து, அக்குளில் 15 நிமிடம் வைக்க வேண்டும். பின் இதேபோல் ஒரு நாளைக்கு 3 முறைகள் செய்து வந்தால், அக்குள்களில் ஏற்படும் கட்டிகள் விரைவில் குறைந்து விடும்.

ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை விரலில் தொட்டு, அக்குளில் மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இதேபோல் தினமும் இரண்டு முறை செய்தால், அக்குளில் ரத்த ஓட்டம் அதிகரித்து, வீக்கம் குறைந்து விடும்.

தர்பூசணி

தர்பூசணியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நமது உடம்பின் ரத்தத்தை சுத்தம் செய்து, வீக்கத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது. இதனால் அக்குள்களில் வீக்கம் வராமல் தடுக்கிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு மற்றும் நீரை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, காட்டன் பயன்படுத்தி கட்டிகள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதேபோல் ஒரு நாளைக்கு 4 முறைகள் செய்ய வேண்டும்.

ஜாதிக்காய்

ஒரு கப் நீரில் 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் அக்குள்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைந்து விடும்.

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனை தினமும் பலமுறை அக்குளில் தடவி வர வேண்டும். இதனால் அக்குளில் இருக்கும் கட்டிகள் விரைவில் மறைந்து விடும்.

மஞ்சள்

மஞ்சள் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இதே போல தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.