Home சூடான செய்திகள் ஸ்ரீகாந்த் என் நண்பர்: பாகன் நாயகி ஜனனி ஐயர்

ஸ்ரீகாந்த் என் நண்பர்: பாகன் நாயகி ஜனனி ஐயர்

26

 

பாகன் படத்தின் படப்பிடிப்பின்போது நாயகன் ஸ்ரீகாந்த்,எனக்கு நண்பராக உதவி செய்துள்ளார் என்று பாகன் பட நாயகி ஜனனி ஐயர் கூறியுள்ளார்.
நண்பன் திரைப்படத்திற்கு பிறகு நாயகன் ஸ்ரீகாந்த் பாகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக அவன் இவன் நாயகி ஜனனி ஐயர் நடிக்கிறார்.

பாகன் படப்பிடிப்பின் போது ஸ்ரீகாந்த், ஜனனி ஐயருக்கு நட்பு ரீதியான பல உதவிகளை செய்துள்ளார்.

இதுகுறித்து ஜனனி ஐயர் கூறியதாவது, நான் பாகன் படத்தில் வசதியான வீட்டு பெண்ணாக,’மகாலட்சுமி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

இந்த காதல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நடிக்க பயந்தேன். அவர் பல படங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர் என்பதால் எனக்குள் தயக்கம் இருந்தது.

ஆனால், அவரோ யதார்த்தமாக பழகக்கூடிய நண்பராக இருந்தார். நடிப்பு குறித்து எனக்கு நிறைய குறிப்புகள் வழங்கி உதவியுள்ளார்.

காட்சிகளில் நன்றாக நடித்தால், என்னை பாராட்டி உற்சாகப்படுத்துவார் என்று பாகன் பட நாயகி ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

Previous articleமூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ள ஸ்ருதிஹாசன்
Next articleபாலிவுட் படங்களில் நடிக்கும் நிலா