Home சமையல் குறிப்புகள் வெங்காய பக்கோடா

வெங்காய பக்கோடா

24

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
எண்ணெய் – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.

3. ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும்.

4. தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும். 6. மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.

Previous articleஆண்களின் குறி அளவு பற்றிய ஆய்வு
Next articleதினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும்..?