Home இரகசியகேள்வி-பதில் விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ ?

விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ ?

105

டாக்டர் கடந்த மாதம் தற்செயலாக ஒரு விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. இது என் மனைவிக்கும் தொற்றி விடுமோ என்ற சந்தேகமும் படுத்துகிறது. பால்வினை நோயின் அறிகுறிகளை சொல்றீங்களா ப்ளீஸ்..?

விலை மாதிடம் போவதற்கு முன்பு சாதக பாதகங்களையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விலை மாது நோய்களின் உறைவிடமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கும் கொடுப்பீர்கள். இனி குழந்தை பிறந்தால் அதற்கும் போய்ச் சேரும் அல்லவா?

பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால், பிறப்பு உறுப்புகளில் இருந்து சீழ் வடியும், சிறுநீர் கழிக்கும் போது மோர் மாதிரி திரிதிரியாக வெளியேறும். கூடவே, எரிச்சல், தீயைக் கொளுத்தி உள்ளே வைத்தது மாதிரி இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். மலம் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் இருக்கும். பிறப்பு உறுப்பில் வலி, இடுப்பு அரையில் நெரிக் கட்டி தோன்றும். உடலில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். தோலில் சிறுசிறு கட்டிகளும், காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டுவலி போன்றவை தோன்றும்.

உங்கள் மனைவியிடம் பால் வினை நோய் இருக்கிறதா என்று நேரில் கேட்டு விடாதீர்கள். குட்டு வெளிப்பட்டு குடும்பமே கெட்டு விடும். அவர்களாகவே உங்களிடம் பேச்சு வாக்கில், சிறுநீர் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் வருவதாகவோ, சில சமயம் ரத்தமோ சீழோ கலந்து வருவதாகவோ, அடிவயிற்றில் வலி, பிறப்புறுப்புப் பகுதிகளில் நமைச்சல், எரிச்சல், இரத்தம் வடிதல், உடலுறவின் போது வலி, துர்நாற்றத்துடன் கூடிய திரவச் சுரப்பு இருப்பதாகச் சொன்னால் அது பால்வினை நோயால் ஏற்பட்டிருக்கக் கூடும். உடனே நல்ல நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்று விடுங்கள்.

என் வயது 40. என் கணவர் அடிக்கடி “அதுக்குக்” கூப்பிடறார். இல்லா விட்டால் வேறு யாரை யாச்சும் பார்த்துப்பேன் என்று மிரட்டுகிறார். எனக்கும் ஒத்துழைக்க ஆசை தான். ஆனால் வலி, நாட்டமின்மை போன்றவை இருக்கு என்ன செய்யறது? இந்தப் பிரச்சனை தீர ஒரு வழி சொல்லுங்கள்!

இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமா? உங்க வயதில் உள்ள பல பெண்களுக்கு இருக்கு. இதற்குக் காரணம் இரண்டு. முத லாவது ஹார்மோன் குறைபாடு. நாற்பது வயதானாலே மாதவிலக்கு நிற்கப்போகிற வயது வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ள லாம். பீரியட்ஸ் மாதா மாதம் வராமல் விட்டு விட்டு வரும். இந்த நிலையில் உங்களுக்குப் பாதுகாப்பு போன்றிருந்த ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அளவு குறைஞ்சிட்டதால, உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, வலி போன்றவை ஏற்படுகிறது.

இந்த மாதிரியெல்லாம் இல்லை என்றால், உங்களுக்கு மன அளவில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கு என்று அர்த்தம். உங்களவர் ரொம்ப அவசரக்காரர், நீங்க ரெடியாவதற்குள்ளே அவரு முடி சாய்ந்து போயிடறது வழக்கமா இருக்குன்னு வச்சுக்கங்களேன்… இயல்பாகவே அது மேல ஒரு சலிப்பு வந்துடும். அப்புறம் மனம் விரும்பாவிட்டால் உடல் ஒத்துழைக்காது. இதனால்தான

வயது 38 ஆகிறது. இரண்டு வருடமாக எனது உடம்பில் ஒரு மாறுதல்! ஆண் தன்மை போல மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடம்பில் வழக்கத்துக்கு மாறான இடங்களிலும் முடி முளைத்துள்ளது. முகம்கூட பெண்மையை இழப்பதுபோல தென்படுகிறது. இது எதனால்?

நீங்கள் சொல்கிற அறிகுறியை வைத்து பார்த்தால் இந்த பாதிப்பிற்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று பெயர். பெண்களின் கர்ப்பப ;பையில் கரு உருவாவதற்குத் தேவையான சினை முட்டையை உற்பத்தி செய்து அனுப்பும் வேலையை செய்கின்ற இரண்டு சினைப்பைகள், கருப்பைக்கு இருபுறமும் பாதாம் பருப்பு சைஸில் இருக்கின் றன. இந்த சினைப்பைகளில் சினை முட்டைகள் மாதம் ஒரு சினை முட்டை மட்டும் வளர்ச்சியடைந்து ஆணின் உயிரணுவோடு சேரத் தயாராக இருக்கும். உயிரணுவோடு சேர முடியாத முட்டைகள் மாதவிடாயாக வெளியேறி விடும்.

லட்சத்தில் ஒருவருக்கு பாலிசிஸ் டிக் ஓவரி என்கின்ற பாதிப்பு இருக் கும். இந்த பாதிப்பு இருப்பவர்க ளுக்கு சினைப்பையின் சுவர்கள் தடிப் பாக இருக்கும். அதனால் உள்ளேயி ருக்கும் சினை முட்டைகளின் வளர்ச் சியானது குறைந்து மாதவிடாயானது ஒழுங்காக வருவதில்லை. இந்நிலையில் பிட்யூட்டரி சுரப்பி யானது இந்த பாதிப்பினை சரிப்படுத்த அதிகப்படியான ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதிகப் படியாக பிட்யூட்டரி சுரப்பி சுரக்க ஆரம்பிப்பதனால் வழ வழப்பாக உள்ள பெண்களின் முகத்தில் முடி வளரத் தொடங்கி விடுகின் றது.பெண்மை தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. இதுதான் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமின் விபரீத விளைவு. இந்த பாதிப்பிற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் நல்ல ஹார்மோன் ஸ்பெஷலிஸ்டை அணுகுவது நல்லது.

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. விந்துப் பரிசோதனையில் விந்து அணுக்களே இல்லை என வந்திருக்கிறது. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?

உங்களுக்கு மூன்று முறை விந்துப் பரிசோதனையை மூன்று வார இடை வெளியில் செய்ய வேண்டும். மூன்று முறையும் விந்தணுக்கள் இல்லையென வந்தால், உங்களை முழுவதும் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில் விந்துப் பைகளில் சிறிது சதை எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஹார்மோன்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவில் உங்களுக்கு விந்துக் குழாயில் அடைப்பு இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கி உங்களுக்கு மகப்பேறு அளிக்க இயலும். இல்லையெனில் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வது, விந்துதானம் பெறுவது, குழந்தையில்லாமல் இருப்பது, இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். முதல் இரண்டு முறைகள் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

Previous articleஉடலுறவின்போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகக் காரணம் என்ன?
Next articleமூலநோய் எப்படி உண்டாகிறது?