Home சூடான செய்திகள் வயாக்ராவுக்கு இணையான 6 இயற்கை உணவுகள்

வயாக்ராவுக்கு இணையான 6 இயற்கை உணவுகள்

26

பாலியல் விருப்பம் குறைவதற்கு விரைப்பின்மை, மன இறுக்கம், மருந்துகள், தூக்கமின்மை, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதற்கு பெரும்பாலும் ஆண்கள் வயாக்ரா மருந்தையே நாடுவார்கள், ஆனால் வயாக்ராவைப் போன்றே இதற்கு உதவக்கூடிய சில பழங்களும் காய்கறிகளும் கூட உள்ளன என்பது பலரும் அறியாத உண்மை!

வயாக்ரா மருந்து பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவினாலும், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. மருந்து கடைக்குச் செல்வதற்கு பதில் நீங்கள் இயற்கை நமக்கு அளித்துள்ள வயாக்ரா மாற்றுகளை முயன்று பார்க்கலாம்.
வெண்ணெய்ப்பழம் (Avocados)

இந்தப் பழத்தில் பல ஊட்டச்சத்துகளுடன் வைட்டமின் B6 அதிகமுள்ளது. இது ஆண்களின் பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவற்றில் ஃபோலிக் அமிலமும் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இதனால் ஆற்றலும் தாங்குதிறனும் அதிகரிக்கிறது.
பருப்பு வகைகள் (Nuts)

முந்திரி, அக்ரூட், பாதாம் போன்ற பருப்புகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பெருமளவில் உதவக்கூடியது. பாதாமில் அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது, அது இரத்தக் குழாய்களைத் தளர்த்தி இரத்த ஓட்டம் மேம்பட உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

அஸ்வகந்தா (Ashwagandha)
இந்தப் பழங்கால மூலிகையானது, ஆண்களின் பாலியல் விருப்பம் குறைவதற்கான முக்கியமான காரணமாக இருக்கின்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கருதப்படுகிறது. பாலியல் திறனை மேம்படுத்துவதற்கென்று அஸ்வகந்தா சத்து மருந்துகள் பல கிடைக்கின்றன.
தர்பூசணி (Watermelon)

தர்பூசணியில், அர்ஜினைனாக மாற்றப்படக்கூடிய சிட்ருலின் எனும் அமினோ அமிலம் உள்ளது. இது இரத்தக் குழாய்களைத் தளர்த்தி இரத்த ஓட்டம் மேம்பட உதவுகிறது. அதுமட்டுமின்றி, சுவையான இந்தப் பழத்தில் நைட்ரிக் ஆக்ஸைடும் உள்ளது, இது ஆண்களின் பாலியல் விருப்பத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த மிகவும் உதவக்கூடியது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இதனை பழச்சாறாகவும் அருந்தலாம், சேலடாகவும் சாப்பிடலாம், அப்படியே பழமாகவும் சாப்பிடலாம்.

தண்ணீர்விட்டான் கொடி (Asparagus)
இதில் உள்ள வைட்டமின் E மற்றும் B ஆகியவை ஹிஸ்டமின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இந்த ஹிஸ்டமின் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பாலியல் விருப்பத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஏலக்காய் (Cardamom)

நறுமணமூட்டுகின்ற ஏலக்காய் ஆண்களின் மனநிலையை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது, இதன் நறுமணம் மனநிலையை அற்புதமாக்குகிறது. விறைப்பின்மை, துரிதமாக விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இது மிகவும் பலனளிக்கக்கூடியதாகும். காபியில் ஏலக்காயைச் சேர்த்து அருந்தும்போது பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும் திறன் இன்னும் பலமடங்கு அதிகரிக்கிறது.
பாலியல் விருப்பம் குறைவது, உங்களை அச்சுறுத்தக்கூடிய, மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சனைதான், ஆனாலும் எல்லாவற்றுக்கும் மாத்திரை மருந்துதான் தீர்வு என்று மனமுடைய வேண்டியதில்லை. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ, இந்த ஆரோக்கியமான உணவுகளை முயற்சித்துப் பாருங்கள். .

Previous articleசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..!
Next articleநண்பன் மனைவி மீது மோகம் ஏற்படுவது தவறா?