Home சூடான செய்திகள் யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)

யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)

34

சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?

“வாவ்…திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?”
என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.

திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.

அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.

இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.

அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே.

உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.

திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.

“உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? ”
இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்
“நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா…”
அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ…போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?

எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.