Home சூடான செய்திகள் மோத்வானியை ‘டிஸ்மிஸ்’ செய்த ஹன்சிகா!

மோத்வானியை ‘டிஸ்மிஸ்’ செய்த ஹன்சிகா!

25

நடிகை ஹன்சிகா நியூமராலஜி படி தனது பெயருக்கு பின்னால் உள்ள மோத்வானியை நீக்கியுள்ளார்.

தனுஷின் மாப்பிள்ளை மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானிக்கு ஆரம்ப காலம் அகோரமாக இருந்தாலும், தற்போது அதிர்ஷ்ட காலம் என்றே சொல்லலாம். அவர் விஜயுடன் நடித்த வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ஓ.கே.ஓ.கே. ஆகிய படங்கள் நன்றாக ஓடியதால் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சிம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளார் ஹன்சிகா.

நடிகர், நடிகைகள் நியூமராலஜி படி தனது பெயரில் சில எழுத்துக்களை சேர்ப்பதும், நீக்குவதுமாக உள்ளார்கள். அதற்கு ஹன்சிகாவும் விதிவிலக்கல்ல. நியூமரலாஜிபடி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்று தெரிவி்த்துள்ளார்.

தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்று வெளியான படம் தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. அதில் சித்தார்த், ஸ்ருதி ஹாசன், நவ்தீப்புடன் ஹன்சிகாவும் நடித்துள்ளார். இந்த பட ஷூட்டிங்கின் உங்களுக்கும் ஸ்ருதிக்கும் லடாய் ஏற்பட்டதாமே என்று கேட்டதற்கு, நாங்கள் ஏன் மோதிக்க வேண்டும். அதெல்லாம் சும்மா யாரோ சொல்றது. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்றார்.

Previous articleபிரியங்கா எனக்கு பிரண்டெல்லாம் கிடையாது: இலியானா
Next articleபாலிவுட்டிலேயே நான் தான் பெஸ்ட் ‘ஐட்டம்’: கஷ்மிரா ஷா