Home ஆண்கள் ஆணுறுப்பின் முனையில் பருக்களா?

ஆணுறுப்பின் முனையில் பருக்களா?

35

எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.
இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

Previous articleகேள்விக்கு மயக்கமா..? தயக்கமா..?
Next articleபெண்ணுறுப்பு இப்படி கையாளுங்கள்