Home சமையல் குறிப்புகள் முட்டைகோஸ் – பசலைக் கீரை சப்பாத்தி

முட்டைகோஸ் – பசலைக் கீரை சப்பாத்தி

14

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,
காய்ச்சிய பால் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.

ஸ்டஃப் செய்வதற்கு:

முட்டைகோஸ் துருவல் – அரை கப்,
வெங்காயத் துருவல் – கால் கப்
கேரட் துருவல் – கால் கப்
பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – கால் கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

• கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து பிசறி வைத்து 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து எடுத்து அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடி சற்று கனமாகத் சப்பாத்திகளாக உருட்டவும்.

• தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.

• சுவையான சத்தான முட்டைகோஸ் – பசலைக் கீரை சப்பாத்தி ரெடி

Previous articleஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சித் தகவல்
Next articleஉறக்கமின்மை நோயைக் குணப்படுத்த : தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர்!