Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடல் கோளாறுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!

மார்பில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடல் கோளாறுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!

26

மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா? இதைப் பற்றி வெளியில் பேசவோ, சொல்லவோ தயங்கி எத்தனையோ பேர் தங்களுடைய உயிரையே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உங்களுடைய மார்பகத்தைக் கொண்டே உங்களின் உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வளர்ச்சி : மார்பகம் மிக குறுகிய காலத்தில் திடீரென்று வளர்ச்சியடைகிறதா என்று பாருங்கள். மார்பகட்தில் கொழுப்பு செல்கள் தான் நிறைந்திருக்கிறது. அதோடு இதில் க்ளாண்டுலர் திசுக்கள் இருக்கின்றன.

ஹார்மோன் : கர்ப்பமடைந்திருப்பது, தாய்ப்பால் கொடுப்பது போன்ற காரணங்களால் மார்பகம் சற்று தளர்ந்திருக்க வாய்ப்புண்டு ஆனால் இவை அல்லாத நேரத்தில் மார்பகம் தளர்ந்திருந்தாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ மருத்துவரை சந்திப்பது அவசியம். கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட்டால், மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தின் போது சிலருக்கு மார்பகம் தளர்ந்திருக்கும்.மார்பகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோனுக்கு மிகவும் சென்ஸ்டிவாக இருக்கும்.

சுருங்குதல் : உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம்.

தைராய்டு : மார்பகங்களில் ஃபேட்டி திசுக்கள் தான் நிறைந்திருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து எடுக்கக்கூடிய பிரயத்தனங்கள் உங்கள் மார்பகத்தையும் குறைத்திடும். அதோடு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தாலும் குறைக்கும். ஓவர் ஆக்டிவ் தைராய்டு இருப்பவர்களுக்கும் மார்பகம் குறையும்.

மாதவிடாய் : மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அலர்ஜி : உங்களுக்கு பொருந்தாத உள்ளாடை அணிவதாலும், அதீத வியர்வையினால் அங்கே உருவாகும் பாக்டீரியாவினாலும் பெண்களுக்கு மார்பக பகுதிகளில் அரிப்பு உண்டாவது உண்டு. சிலருக்கு சோப், பாடி ஸ்ப்ரே,டிடர்ஜண்ட் அலர்ஜியினால் கூட ஆவதுண்டு. இதற்காக ஹைட்ரோகோர்டிஸோன் க்ரீம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு அலர்ஜி குறையவில்லை என்றால் மருத்துவரை சந்திக்கலாம்.

ஓவரியன் சிண்ட்ரோம் : மார்பகத்தில் முடி வளர்ச்சியிருந்தால் உங்கள் உடலில் டெஸ்ட்டிரோன் அளவு உயர்ந்து விட்டதாக அர்த்தம்.உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தினால் அட்ரீனல் சுரப்பி அளவுக்கு அதிகமாக ஆண்மைக்கான ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இதன் அறிகுறிகள் உங்கள் மார்பகங்களிலும், முறைய மாதவிடாயினாலும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இவை தொடரரும் பட்சத்தில் உங்கள் கர்ப்பையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

Previous articleபெண்களின் முலைக்காம்பில் ரோமங்கள்
Next articleவிந்தணுக்கள் வலிமைபெற ஒரு இலகுவான வழி..