Home சூடான செய்திகள் மலையாளத்திலும் திண்டாடும் பிரியாமணி

மலையாளத்திலும் திண்டாடும் பிரியாமணி

19

பிரியாமணி சமீபத்தில் நடித்த பிரஞ்சியத்தன் என்ற படம் தோல்வி அடைந்ததை அடுத்து, அவரின் மார்க்கெட் சரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்த பிரியாமணி, பருத்திவீரன் படம் மூலம் வெற்றி நாயகியானார்.

அப்படத்தில் வரும் முத்தழகு கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

இதனால் தமிழ் சினிமாவில் இருந்து மலையாள திரையுலகிற்கு சென்றார் பிரியாமணி. அங்கு ஆபாசமாக நடிக்கும் நாயகியாக வலம் வந்த பிரியாமணியின், மார்க்கெட் இப்போது மலையாளத்திலும் சரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான பிரஞ்சியத்தன் படம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் பிரியாமணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் தப்பன்னா படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரியாமணி, அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், மம்முட்டி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து விட்டு நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் வதந்தி தான். அந்த படத்தில் நடிக்கும்படி என்னிடம் அணுகவில்லை என்று கூறியுள்ளார்.

Previous articleபரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா!
Next articleஅஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி