Home சூடான செய்திகள் மருத்துவ ஆய்விற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த கொடூரன் கைது!

மருத்துவ ஆய்விற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த கொடூரன் கைது!

17

டோக்கியோ: ஜப்பானில் மருத்துவ ஆய்விற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த கொடூரன் கைது செய்யப்பட்டான். ஜப்பானில் பல்வேறு கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய 54 வயதான நொகுச்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை விசாரித்த போது பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ ஆய்விற்காக உறங்கும்போது இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதாக சொல்லி மருத்துவத்துறையில் ஆர்வமுள்ள பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற நொகுச்சி மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ஆபாச இணைய தளங்களுக்கு விற்று அதன் மூலம் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

கடந்த நவம்பர் 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை நொகுச்சியால் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Previous articleபெண்களின் உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்
Next articleபெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள .