Home சூடான செய்திகள் Tamil sex tips,மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது, நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது!

Tamil sex tips,மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது, நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது!

12

ஆண்களுக்கு திருமணம் ஆனாலும், குழந்தை பிறந்தாலும் கூட, நண்பர்களுடன் பார்ட்டி செய்வது, ஊர் சுற்றுவதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைப்பது இல்லை. அதனால், தான் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஏதாவது பொய் கூறிவிட்டு நண்பர்களை பார்க்க சென்று விடுவார்கள். முக்கியமாக ஐ.டி-யில் வேலை செய்யும் நண்பர்கள் அலுவலகம் செல்கிறேன் என மனைவியிடம் பொய் கூறிவிட்டு, வரக் ப்ரம் ஹோம் என அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு நண்பர்களுடன் ஒரே வீட்டில் சேர்ந்து கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சிஸ்டம் மட்டுமே ஆனில் இருக்கும். இவர்கள் ஆப் அடித்துவிட்டு ஆப் ஆகிவிடுவார்கள். இது சாதாரண நாட்களில் சகஜம். ஆனால், மனைவி உடல் நலம் குன்றி இருக்கும் போதும் நண்பர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் நபராக நீங்கள் இருந்தால்.. இவற்றை கொஞ்சம் நினைவில் சேமித்துக் கொள்ளுங்கள்…

உணர்வின்றி போகும்! அப்படி நீங்கள் மனைவி உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது, நண்பர்களுடம் ஊர் சுற்ற நினைப்பவராக இருந்தால், அவர்கள் மனதில், கணவனுக்கு தன் மீது பாசமே இல்லையா? என்ற கேள்வியும். நீங்கள் ஒரு உணர்வற்றவர் என்ற பிம்பமுமே எழும்.

ஏமாற்றம்! கணவன் இந்த நிலையலும் தன்னை தனியாக விட்டு வெளியே செல்கிறானே என எண்ணும் போது மனைவி ஏமாற்றம் அடைந்ததாக உணரும் வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன.

பழிக்குப்பழி! அவர்களுக்கும் நேரம் அமையும் போது, அதாவது நீங்கள் உடல் நலம் குன்றி இருக்கும் போது, அவர் கவனிப்பில் அக்கறை இன்றி காட்டிக் கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் மனைவி இப்படி செய்வதில்லை. திட்டிக் கொண்டாவது, நீங்கள் செய்த தவறை குத்திக் காட்டியவாது உங்களை நன்றாக தான் கவனித்துக் கொள்வார்கள்.

வேறு நபர்கள்.. இந்த நேரத்தில் வேறு நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் மனைவிக்கு உதவும் போது. உங்களை காட்டிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் எழுவதற்கான அதிகம் இருக்கின்றன.

மகிழ்ச்சியா? சரி, அப்படியே நீங்கள் பார்ட்டிக்கு போனாலும், பொண்டாட்டிக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ.. என்ற எண்ணமும் மனதில் ஓடிக் கொண்டு தான் இருக்கும். எனவே, நீங்களும் நண்பர்களுடம் சந்தோஷமாக இருக்க முடியாது.

மருந்தை காட்டிலும் பெரிது… நீங்கள் மனைவி உடல் நலம் சரியாக இல்லாத போது அருகே இருப்பது மருந்தை காட்டிலும் அதிக பயனளிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் சௌகரியமாக உணர்வார்.

அறிவியல் பார்வை… சைக்காலஜி நிபினர்கள், தங்களுக்கு பிடித்த நபர்கள் தங்களுடன் இருக்கும் போது மூளை வலிமையாக செயற்படும். இந்த சூழலில் சேமிக்கப்படும் நினைவுகள் அந்த நபர் மீது அதிக காதல் கொள்ள செய்யும் என கூறுகின்றனர்.

Previous articleTamil Doctor, ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க…
Next articleTamil Sex thakaval, ஆண்குறியில் ஏடாகூட பிரச்சனை உண்டானதால், பார்ன் துறையை விட்டு விலகிய நடிகர்!