Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும்

பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும்

21

வெள்ளைப்படுதல்.
பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் – வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப் பட் டாலே அது உடம்பு வீக் ஆகி விட்டத ற்கான அடையாளம் என பலர் நினை க்கிறார்கள். ஆனால் இது தவறு. அநேகமாக எல்லாப் பெண்களு க்குமே குரிப்பிட்ட சில நாட்களில் வெள்ளைப்படுகிறது. சிலருக்கு இது கொஞ்சம் அதிகமாகவோ இல்லை குறைவாகவோ இருக்கலாம். மற்றபடி இது பொதுவான விசயம்.
பெரும்பாலும் பீரியட்ஸ் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வெள்ளைப் படுகிறது. பொதுவில் பாவாடையோ அல்லது உள்ளா டையோ நனையும் அளவிற்கு வெள்ளைப்பட்டால் ஏதோ உடலில் பிரச்சனை என்றே அர்த்தம். வஜைனா மற்றும் கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் பகுதியில் இருக்கும் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சளி போன்ற திரவமே இதற்கு காரணம்.
எந்த தீயசக்திகளும் ஊருக்குள் நுழைந் து விடாமல் இருக்க ஊர் எல்லையில் எல்லைச்சாமி இருக்கிற தே. அதுபோல வஜைனாவி ல் இருக்கும் Lacto Bacillus என்ற பாக்டீரியா தான் வஜைனாவின் எல்லைச்சாமி. இந்த பாக்டீரியா சுரக்கும் லாக்டோ அமிலம் வஜைனா வின் மேற்புற லைனிங்கின் மேல் பரவி நின்று கெடுதல் விளைவிக்கும் எந்த கிருமிகளும் வஜைனாவுக்குள் நுழைந்து விடாதபடி பாதுகாக்கிறது. சமயத்தி ல் இந்த பாக்டீரியாவையே பாதிக்கும் வகையில் ஏதாவது நோய் த் தொற்று ஏற்பட்டால் பல கிருமி களும் பூஞ்சைகளும் வஜைனா வில் நுழைந்துவிடுவதால்தான் இந்த வெள்ளைப்படுதல் அதிகமாகி றது.
வஜைனாவில் என்னென்ன காரணங்கலுக்காக இந்த வெள்ளைத் திரவம் சுரக்கிறது? முதல் வகை பூஞ்சை நோய்த் தொற்றினால் ஏற்படுவது. இந்த வகை பாதிப் பால் தயிர் ஆடை மாதிரி வெள் ளைப்படுவதுடன் வஜைனாவில் அரிப்பும் எடுக்கும். இவ்வித வெள்ளைப்படுதல் சர்க்கரை நோயின் காரணமாகவோ இல் லை நீண்ட நாட்கள் ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகள் சாப்பிடுவதா லோ நடக்கலாம். இதை தவிர்க்க ஈஸ்ட் மாத்திரைகள், விட்ட மின் பீ மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
அடுத்த வகை வெள்ளைப்படுதல் நுரை நுரையாய் வெள்ளைப் படுதல். இதற்கு காரணம் வஜைனா வில் தங்கி இருக்கும் trichomonas என்னும் கிருமி. உடலுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, சுகாதாரம் மற்றும் உடலுறவு இவற் றின் மூலம் கிருமித் தொற்று ஏற்படு வது தான் காரணம்.
இவ்வகை நோய்த் தொற்றில் கண வன் மனைவி இருவருமே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டு ம். இல்லை எனில் கண வனுக்கும் ஆண் குறியில் அரிப்பு, எரிச் சல் ஏற்படக் கூடும். அல்லது உடலுறவின் போது திரும்ப திரும்ப கணவனிடமிருந்து இந்த கிருமி மனைவிக்கு பரவ வாய்ப்புள் ளது. இதை தடுக்க என இருக்கு ம் மருத்துவ க்ரீம்களை வஜை னாவின் உட்புறம் தடவிக் கொள்வ துடன் ஆண்டி-பயாடிக் ஸ் மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிபிலிஸ், கொனேரியா, ஹெச்.ஐ.வி போன்ற தீவிரமான செக்சு வல் நோய்கள் ஏற்பட்டிருந்தாலும் அதிக வெள்ளைப்படுதல் ஏற் பட வாய்ப்பிருக்கலாம் என்பதால் இது போன்ற நோய் தாக்கம் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
செர்விக்ஸில் இருந்து வெளியேறும் வெள்ளைத் திரவம்
செர்விக்ஸ் பகுதியில் நீண்ட நாள் நோய்த்தொற்று இருந்தாலோ, புற்று நோய் இருந்தாலோ அல்லது செர்வி க்ஸ் பகுதி அரிக்கப்பட் டிருந்தாலோ அதிக வெள்ளைப் படுதல் ஏற்பட லாம். வெளியில் தெரியாதபடிக்கு செர்விக்ஸ் மிக மோசமாக பாதிக்க ப்பட்டிருந்தால் கர்ப்பப்பையையே கூட எடுக்க வேண்டி வரலாம். லேசான தொற்று தான் என்னும் போது ஆண்டி -ப்யாடிக்ஸ் மருந்து உட்கொ ண்டு இதை சரி செய்யலாம்.
பெல்விக் நோய்த் தொற்றால் வெள்ளைப்படுதல்

மாதவிடாய்நேர வலிபோல அதிக வலியுடன் அரிப்பும் இரு ந்தால் கீழ்க் கானும் மருத்து வச் சோதனைகளை செய்து பார்த்துவிடுவது நல்லது.
1) நோய்த்தொற்று அறிய அல்ட்ரா சவுண்ட் சோதனை
2) சர்க்கரையை கண்டறிய குளு கோஸ் டாலரன்ஸ் சோதனை
3) புற்றினை கண்டறிய பாப்ஸிமிர் சோதனை
4) டிரைகோனமஸ் கிருமியை கண்டறிய வெட்ஸ்மிர் சோதனை
5) மற்ற செக்சுவல் நோய்களை கண்டறியும் வி.டி.ஆர்.எல் ஹெச் .ஐ.வி சோதனைகள்

Previous articleபெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும்
Next articleதாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது