கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாகப்
போகிறவர் வாரத்திற்கு அரைகிலோ வீதம் எடை அதிகரிக்க வேண்டும்
என்பதால் எடை அளவீடுகள் மிக முக்கியமானதாகும் அதற்காகத்தான்
ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் எடை பரிசோதிக்கப்படுகிறது.
அப்படி அதிகரிக்காமல் போகும் பட்சத்தில் கருக்காலத்தில்
ஏற்படும் முக்கியக் குறைபாடான டாக்சீமியா அபாயம் உண்டாவதற்கு
அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறே, இரத்த அளவீட்டை அறியும் பரிசோதனையும் முக்கியம்.
ரத்த அழுத்தம் 140/90 என்கிற அளவீட்டிற்கும், அதற்கு
அதிகப்படியான அளவீட்டிற்கும் சென்று விடக் கூடாது. இது
அதிகபட்சமான அளவாகும். இரத்த அழுத்த அளவு இந்த அளவை எட்டினால்
சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி வரும்.
சிறுநீர் பரிசோதனையில் முக்கியப் புரதப் பொருள் பரிசோதனை
செய்யப்படுகிறது. ஏதேனும் தீவிர பிரச்சினை ஏற்படலாம் என்பதை
எச்சரிக்கை செய்யும் அபாய அறிகுறிதான் இது. இதனை தொடர்ந்து
கண்காணிக்க வேண்டியதும் அவசியம் …